புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2013

விருதுநகர் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பு: வைகோ தகவல்!
விருதுநகரில் நடக்கும் ம.தி.மு.க. மாநாட்டில், கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.


ம.தி.மு.க. தேர்தல் நிதியளிப்பு கூட்டம் வேலூரில் இன்று நடந்தது.
இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறும்போது, ''விருதுநகரில் வருகிற 15 ஆம் தேதி ம.தி.மு.க. மாநாடு நடக்கிறது. எங்கள் கட்சி நேர்மையாக உள்ளதால் பல லட்சம் மக்கள் விருதுநகரில் கூடுவார்கள்.
இந்த மாநாட்டில் ம.தி.மு.க. எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து அறிவிக்கப்படும். விரைவில் அகில இந்திய அளவில் அரசியல் மாற்றம் ஏற்படும்.
மத்திய அரசு இலங்கை தமிழர், கச்சத்தீவு, நதிநீர் பிரச்னைகளில் தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது. கச்சத் தீவு இந்தியாவுக்கு சொந்தம் இல்லை என மத்திய அரசு பிரணாம பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இதனை மத்திய அரசு தாக்கல் செய்ததா? அல்லது இலங்கை கூறியபடி தாக்கல் செய்யப்பட்டதா? என்பது தெரியவில்லை.
விலைவாசி உயர்வுக்கு காங்கிரஸ் அரசே காரணம். இதற்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்'' என்றார்.

ad

ad