புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2013

கிளிநொச்சி விருப்பு வாக்குகளில் அரியரட்ணம் முன்னணி - ஆனந்தசங்கரி தோல்வி

மைவடக்கு மாகாணசபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  வேட்பாளர்களுக்குக் கிடைத்த விருப்பு வாக்குகளின் விபரங்களை மாவட்டச் செயலகம்  வெளியிட்டுள்ளது.


இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் கீதாஞ்சலியும் தோல்வியடைந்துள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட ப.அரியரட்ணம் 27,264 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி 
1.ப.அரியரட்ணம் - 27,264 வாக்குகள்
2. குருகுலராஜா  - 26,427 வாக்குகள்
3.பசுபதிப்பிள்ளை - 26,132 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
1. தவநாதன் - 3,753 வாக்குகள்

ad

ad