புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2013

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் ஒத்திவைப்பு : ஜெ., அறிவிப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக முதல்வரும், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். 



இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,  ‘’அ.தி.மு.க. விதிகளின் படி, கட்சி அமைப்புகளுக் கான பொதுத்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டும். இதற்காக அ.தி.மு.க. உறுப்பினர்கள் தங்களது பதிவைப் புதுப்பிக்கவும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்குமான பணிகள் தொடங்கப் பட்டன.ஏராளமானோர் உறுப்பினர் உரிமைச் சீட்டு வேண்டி அதற்கான விண்ணப்பப் படிவங்களை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சேர்த்துள்ளனர். இவர்களுக்கான உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைத் தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
கட்சி விதிகளின்படி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தமிழ்நாட்டில் உள்ள கிளைக் கழகங்களின் அடிப்படை உறுப்பினர்களாலும், அ.தி.மு.க. செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கேரளம், புதுதில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களின் கிளைக் கழகங்களின் உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
அ.தி.மு.க.வின் சட்ட விதிகளுக்கு விதி விலக்கு வழங்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. இந்த அதிகாரத்தின் அடிப்படையில், உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கும் பணி நிறைவுபெற்றவுடன் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் நடைபெறும். இதனைத் தொடர்ந்து அடுத்தக் கட்ட அமைப்புத் தேர்தல்கள் நடைபெறும்’’ என அறிவித்துள்ளார்.

ad

ad