புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2013

வாக்கு கொள்ளை இடம்­பெ­றா­விட்டால் வடக்கில் கூட்­ட­மைப்பு அமோக வெற்­றி­பெறும்!- சுனந்த தேசப்­பி­ரிய
வட மாகாண சபை தேர்­தலில் வாக்­குகள் கொள்ளை இடம்­பெ­றா­விட்டால் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு வெற்றி பெறு­வது உறு­தி­யா­கி­விட்­டது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வட மாகா­ணத்­தி­லுள்ள ஐந்து மாவட்­டங்­க­ளிலும் இப்­போது வெற்றி பெறும் என்­பதை காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.
பொரு­ளா­தாரம் மற்றும் மனித வளத்தை பெரு­ம­ளவில் நாசப்­ப­டுத்தி முடி­வுக்கு கொண்டு வந்த யுத்­தத்தால் தமிழ்ப் பிரச்­சி­னையை நிரந்­த­ர­மாக ஒழித்­து­விட்­ட­தாக கூக்­கு­ர­லி­டு­வது, வட­மா­கா­ண ­ச­பையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கைக­ளுக்கு செல்­வதன் மூலம் பொய்­யாக்­கப்­பட்­டு­ விடும்.
இலங்­கையின் முக்­கிய இரு கட்­சி­க­ளான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஐக்­கிய தேசியக் கட்­சி­களைப் போலல்­லாது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வேட்­பாளர் பட்­டி­யலும் சவால் ஒன்றை முன்­வைத்­துள்­ளது.
அந்த வேட்­பாளர் பட்­டி­யலில் வைத்­தி­யர்கள், கல்விப் பணிப்­பா­ளர்கள், சட்­டத்­த­ர­ணிகள், பட்­ட­தா­ரிகள், பொறி­யி­ய­லா­ளர்கள் மற்றும் முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இடம்­பெற்­றுள்­ளனர்.
கடந்த வார ஆரம்­பத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தங்­க­ளது நோக்­கங்கள் மற்றும் வேலைத் திட்­டங்­களை தெளி­வு­ப­டுத்தும் நீண்ட தேர்தல் விஞ்­ஞா­ப­ன­மொன்றை வெளி­யிட்­டது.
மாகாண சபைத் தேர்­தல்­க­ளுக்­காக எந்­த­வொரு கட்­சியும் தேர்தல் விஞ்­ஞா­பனம் வெளி­யி­ட­வில்லை. இத் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தமிழ் இனத்தின் கோரிக்­கைகள் முறை­யாக முன்­வைக்­கப்­பட்­டி­ருப்­பதைக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.
இந்த தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் அடிப்­படை விட­யங்கள் பல குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.
  • 1949 ஆம் ஆண்டு மலை­யக தமிழ் மக்­களின் குடி­யு­ரிமை பறிக்­கப்­பட்­டது முதல் இன்­று­ வரை இந்­நாட்டு தமிழ் மக்கள் முகம் கொடுத்த மாறு­பட்ட கவ­னிப்பு,
  • 1972 மற்றும்1978 அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்­ட­ போது அதில் தமிழ் மக்­களின் கோரிக்­கைகள் முழு­மை­யாக நிரா­க­ரிக்­கப்­பட்­டமை,
  • அர­சியல் தீர்­வுக்­காக தமிழ் அர­சியல் வழங்­கிய இணக்­கப்­பா­டு­களை 1959ம் ஆண்­டிலும் 1966ம் ஆண்­டிலும் பக்கச் சார்­பாக சிங்­கள அர­சி­ய லால் புறக்­க­ணிக்­கப்­பட்­டமை,
  • 1956, 1958, 1961, 1977, 1981 மற்றும் 1983ம் ஆண்­டு­களில் தமிழ் மக்கள் மீது கட்­ட­விழ்த்­து­ வி­டப்­பட்ட கல­வ­ரங்கள்,
  • சுதந்­தி­ரத்தின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாண இன விகி­தா­சா­ரத்தை மாற்­று­வ­தற்கு அரச ஆத­ர­வுடன் சிங்­கள குடி­யேற்­றங்கள் மேற்­கொண்­டமை,
  • யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் இரா­ணுவ ஆத­ர­வுடன் இந்த செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது
ஆகி­யன விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.
அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமது அர­சியல் வேலைத்­திட்­ட­மாக சமஷ்டி முறையை முன்­வைத்­துள்­ளது. அதில் வடக்கு கிழக்கை ஒன்­றி­ணைந்த மாகா­ண­மாக்க வேண்­டு­மெ­ன­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
நாம் இணங்­கி­னாலும் இணங்­கா­விட்­டாலும் இந்த வேலைத் திட்­டத்தின் கீழ் தேர்­தலில் போட்­டி­யி­டவும் தமது கருத்­துக்­களை முன்­வைக்­கவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு உரிமை உண்டு. இலங்­கையில் தனி நாடு அதா­வது பிரி­வி­னை­வாதம் மாத்­தி­ரமே சட்­டத்தால் தடை செய்­யப்­பட்­டுள்­ளது.
இந்த வேலைத் திட்­டத்தில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்ள முக்­கிய தீர்­மா­னங்கள் என்­ன­வென்றால் இலங்கை தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் ஆலோ­ச­னைகள் மற்றும் அதன் பொதுச் செய­லா­ளரின் நிபுணர் குழுவின் சிபா­ரி­சு­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டு­மென்­ப­தே­யாகும்.
யுத்­தத்தின் இறுதிக் கட்­டத்தில் 70,000 தமிழ் மக்கள் கொல்­லப்­பட்­ட­தாகத் தெரி­விக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு யுத்த காலத்தில் மனித உரி­மைகள் மீறப்­பட்­டது தொடர்­பாக சுயா­தீ­ன­மான சர்­வ­தேச விசா­ர­ணையின் மூலமே உண்­மையைக் கண்­ட­றிய முடியும் எனவும் தெரி­வித்­துள்­ளது.
இருந்தும் யுத்த குற்­றங்கள் என்ற வார்த்­தையை பாவிக்­கா­ம­லி­ருப்­ப­துடன் யுத்த காலத்தில் குற்­றங்கள் தொடர்­பாக தண்­டனை வழங்­கு­வ­தற்குப் பதி­லாக உண்­மையை ஏற்றுக் கொண்டு பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட வேண்­டு­மெ­னவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
மேலும் இலங்­கையில் சமா­தா­னத்தை நிலை நிறுத்த சர்­வ­தேச ஆத­ரவு அத்­தி­யா­வ­சி­ய­மெ­னவும் தெரி­வித்­துள்­ளது. காணா­மற்­போனோர் தொடர்­பா­கவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைப்­பது அதே­போல உண்­மையை தெரிந்து கொள்­வது மற்றும் நஷ்­ட­ஈடு வழங்கும் ஆலோ­ச­னையையே முன்­வைத்­துள்­ளது.
அர­சாங்கம் முகம் கொடுக்­க­வுள்ள ஜீர­ணிக்க முடி­யாத இந்த சவாலை அதா­வது தமக்கு அடி­ப­ணி­யாத அர­சியல் அதி­கார கேந்­திரம் இலங்­கைக்குள் எழுச்சி பெறு­வ­தற்கு இன்னும் ஒரு­வார காலமே இருக்­கின்­றது.
அடக்­கு­முறை மூலம் அந்த மாகாண சபையை கீழ்ப்­ப­டியச் செய்ய தேசிய மற்றும் சர்­வ­தேச நிலை­மைகள் இட­ம­ளிக்கப் போவ­து­மில்லை. மறு­புறம் தமிழ் அர­சியல் அதி­கா­ரத்­துடன் இணைந்து இணக்­கப்­பாட்­டுடன் செயற்­பட அரசின் அர­சியல் கருத்­துக்கள் இட­ம­ளிக்கப் போவ­து­மில்லை.
வடக்கு மற்றும் கிழக்கு தொடர்­பாக கடந்த நான்கு ஆண்டு கால­மாக அரசுக்கு மூன்று தந்­தி­ரோ­பா­யங்கள் இருந்­தன.
தமிழ் மக்­களின் இன உணர்வு மற்றும் கோரிக்­கைகள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி மற்றும் நிர்­வாக நட­வ­டிக்­கைகள் மூலம் அடி­மைப்­ப­டுத்திக் கொள்ள முயற்­சிப்­பது ஒரு பக்கமாகும். மறு­பக்கம் அடக்­கு­முறை மற்றும் யுத்த சூழலை வைத்­தி­ருப்­பதன் மூலம் தமிழ் சமூ­கத்தை விரக்­தி­யுறச் செய்து அதன் மூலம் உரி­மை­க­ளுக்­காக ஒன்­றி­ணை­வதை தடுப்­ப­து­மாகும்.
இன்­றைய நிலையில் பார்க்­கும்­ போது இந்த தந்­தி­ரோ­பா­யங்கள் வெடித்துச் சிதறும் சூழலே உரு­வா­கி­யுள்­ளது.
மறு­புறம் அரசாங்க ஆட்­சியை புனி­தப்­ப­டுத்தும் தர்க்­க­மாக அமைந்­தது. தேர்­தல்­களில் வெற்­றி­பெற்று பொது மக்­களின் அங்­கீ­கா­ரத்­துடன் ஆட்சி புரி­கின்றோம் என்­ப­தாகும். எதிர்க்­கட்­சி­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள தோல்வி மனப்­பான்மை கார­ண­மாக தெற்கில் சிங்­கள மக்கள் ராஜ­ப­க்சவுக்கு அர­சியல் அதி­கா­ரத்தை தட்டில் வைத்து வழங்­கினர். இருந்தும் இப்­போது வடக்கு தமிழ் மக்கள் வேறொரு செய்­தியை வழங்கக் காத்­தி­ருக்­கின்­றனர்.
அதா­வது அரசின் ஆட்­சிக்கு தமிழ் மக்­களின் அங்­கீ­காரம் இல்லை என்­பதே அச் செய்­தி­யாகும். சிங்­கள தெற்குப் பகு­தியில் பெறும் அர­சி­யல் வெற்றி தமது அர­சியல் அதி­கா­ரத்தின் புனிதம் தொடர்­பான சான்­றி­த­ழாக முன்­வைக்கும் ராஜ­பக்ச ஆட்சி வடக்கில் பெறப்­போகும் தோல்­வியை தமது அர­சி­ய­லுக்கு அங்கு அங்­கீ­காரம் இல்லை என்­பதை ஏற்றுக் கொள்­ளுமா? அதை அவர்கள் ஏற்றுக் கொண்­டாலும் ஏற்றுக் கொள்­ளா­விட்­டாலும் உல­கத்­த­வர்கள் இலங்­கையை இந்த விதத்தில் தான் பார்ப்­பார்கள்.
தேர்தல் நடை­பெறும் காலப் பகுதி சமூ­க­மொன்றின் ஜன­நா­ய­கத்­து­கான சந்­தர்ப்­பத்தைப் பர­வ­லாக்கும். பொது மக்­களை அர­சியல் விவா­தங்­க­ளுக்கு தூண்டும். இது போன்ற சந்­தர்ப்­பங்­களில் கருத்­துக்கள் வெளிப்­ப­டு­வதை தடுப்­பது சிர­ம­மான விட­ய­மாகும்.
பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்சி தூக்கம் கலை­யாத கும்­ப­கர்­ணனைப் போல் இருக்கும் கார­ணத்தால் மத்­திய அல்­லது வடமேல் மாகா­ணங்­களில் இது போன்ற சந்­தர்ப்­பங்­களை பயன்­ப­டுத்திக் கொள்­ளா­தது துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தாகும்.
ஆங்­காங்கே சில இடங்­களில் இந்த சந்­தர்ப்­பத்தை ஐக்­கிய தேசியக் கட்சி பயன்­ப­டுத்திக் கொள்­வதை மட்டும் காணக் கூடி­ய­தா­க­வுள்­ளது. இப்­ப­டி­யி­ருந்தும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மாகாண சபை தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திலும் வட­மா­காண தமிழ் மக்கள் மத்­தியில் அர­சியல் விழிப்­பு­ணர் வை ஏற்­பத்தும் வகையில் இத் தேர்­தலை பயன்­ப­டுத்திக் கொண்­டுள்­ளது.
இச் சந்­தர்ப்­பத்தில் நாம் நாடு என்ற ரீதியில் ஒரு மாற்­றத்தை நெருங்கிக் கொண்­டி­ருக்­கின்றோம். மீண்­டு­மொரு முறை தமிழர் பிரச்­சினை எமது அர­சியல் மேடை­களில் உரத்த குரலில் ஒலித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. அது போன்­ற­தொன்று இல்லை என்றோ அல்­லது அது வெறும்­ தமிழ், சிங்­கள மொழி­களை கற்­பிப்­பது தொடர்­பான பிரச்சினை என்றோ கூறி இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாது.
நாம் இந்த உண்மையான பிரச்சினைக்கு உண்மையாக தீர்வு காணவேண்டும். வாக்குச் சீட்டுகள் மூலம் தமிழ் மக்கள் இச் செய்தியை 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் வழங்கியதை நாம் அறிவோம்.
ராஜபக்ச ஆட்சி அதற்கு தீர்வு வழங்குவதை விடுத்து அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை ஒழிக்கவும் அச்சுறுத் தல்களை மேற்கொள்வதிலுமே காலத்தை கடத்துகின்றது. இருந்தும் வடமாகாண சபைத் தேர்தலின் பின்னர் இது போன்ற அச்சுறுத்தல்களும் 13வது திருத்தத்தை ஒழிப்பதும் இயலாத காரியமாகிவிடும்.
இலங்கையில் இனங்களுக்கிடையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக எதிர்வரும் காலம் தீர்க்கமானதாக விருப்பதுடன் எதிர்காலம் இது தொடர்பில் எவ்வாறு அமையுமென எதிர்வு கூற முடி யாதவாறு காணப்படுகின்றது.

ad

ad