புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2013

முள்ளிவாய்க்காலில் முகவரி எழுதிச்சென்ற உறவுகளை மனதில் இருத்தி கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள்: குகவரதன் கோரிக்கை
முள்ளிவாக்காலில் புதிய முகவரி எழுதிச் சென்ற உறவுகளை மனதில் இருத்தி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் மக்கள் தீர்ப்பளிக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான சண்.குகவரதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும்” என்ற ஆன்றோர் வார்த்தைக்கு இணங்க தமிழர்களின் வாழ்வில் தர்மம் இனி வெல்லப்போகிறது.
தமிழரின் விடியலுக்கான வாசல் கதவு வடக்கிலே திறக்கப் போகிறது. எனவே, வடக்குத் தேர்தலில் தமிழ்த் தேசியத்துக்காகப் போராடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து விடியலுக்கான கதவை வடக்கு மக்கள் திறந்து வைக்க வேண்டும்.
அத்துடன், வடக்கில் வாக்குரிமை உள்ள கொழும்பில் வாழும் சொந்தங்கள், சிரமம் பாராது தங்கள் இடங்களுக்கு சென்று தமிழ்க் கூட்டமைப்புக்கு வாக்களிக்களிப்பதுடன், தங்கள் உறவினர்களையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும்.
முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னர் வடமாகாணசபைத் தேர்தல் வடிவில் ஒரு குருஷேத்திரக்களம் உருவாகியுள்ளது. நீதிக்கும் அநீதிக்கும், தர்மத்துக்கும் அதர்மத்துக்கும், சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும், உரிமைக்கும் உரிமை மறுப்புக்கும் இடையிலான ஒரு புதிய களம் எம்முன்னே விரிந்துள்ளது.
முள்ளிவாய்க்காலின் பின் நான்காண்டுகள் எம் வாழ்வைச் சூது கவ்வியது. ஆனால் இனி தர்மம் மறுபடி வெல்லப்போகின்றது. தர்ம

ad

ad