புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2013

நாட்டை பிளவுபடுத்துவதோ, குந்தகம் ஏற்படுத்துவதோ எமது நோக்கமல்ல! தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து சம்பந்தன்!
நாங்கள் மக்கள் மத்­தியில் ஒரு­போதும் தவ­றான கருத்­துக்­களை விதைக்­க­வில்லை. எமது தேர்தல் விஞ்­ஞா­பனம் நாட்­டுக்கு குந்­தகம் ஏற்­ப­டுத்தும் வகை­யிலோ, நாட்டைப் பிளவு­ப­டுத்தும் வகை­யிலோ அமை­ய­வில்லை என தமிழ்  தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அதி­காரப் பர­வ­லாக்­க­லுடன் கூடிய அர­சியல் தீர்வை முன்­னி­றுத்தி எமது தேர்தல் விஞ்­ஞா­பனம் அமைந்­துள்­ளது. அதன் மூலம் மக்­களின் ஆணையைக் கோரி நிற்­கின்றோம். அதற்குத் தவ­றான அர்த்தம் கற்பிக்க தென்­னி­லங்கை அர­சி­யல்­வா­திகள் முனையக் கூடாது என்றும் அவர் சொன்னார்.
இலங்­கையில் பிரி­வினைவாதத்தைத் தூண்டும் பிர­சா­ரத்தை மேற்­கொண்­டுள்ள சம்­பந்­தனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞானசார தேரர் தெரி­வித்­தி­ருந்தார்.
இது தொடர்பில் சம்­பந்­த­னிடம் கேட்ட போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
வடக்கின் தேர்தல் நிலை­மைகள் மற்றும் தென்­ப­குதி அர­சி­யல்­வா­திகள் கூட்­ட ­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­பனம் தொடர்பில் மேலும் கருத்து வெளி­யிட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பினர் இரா.சம்­பந்தன்,
அதி­காரப் பகிர்­வுடன் வெவ்­வேறு நாடு­களில் எவ்­வாறு ஆட்சி நடை­பெ­று­கின்­றதோ அதன் அடிப்­ப­டையில் இங்கும் அதி­காரப் பகிர்­வுடன் கூடிய தீர்­வொன்றின் அவ­சியம் குறித்தே எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் விளக்­கி­யுள்ளோம்.
மாறாக, நாட்டைப் பிரித்துக் கொடு என்று கூறவோ? அன்றேல் சட்­ட­வி­ரோ­த­மான கருத்­துக்­களை முன் வைக்­கவோ இல்லை. இதனை அர­சி­யல்­வா­தி­களே திரி­பு­ப­டுத்தி தென்­ப­குதி மக்­களைக் குழப்பி வருகின்றனர்.
பெரும்­பான்மை சிங்­கள மக்­களைக் குழப்பும் நட­வ­டிக்­கைகள் ஏற்றுக் கொள்­ளக்­கூ­டி­ய­வை­யல்ல. முறை­யாக அவர்­க­ளிடம் அதனை எடுத்துச் சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்­வார்கள். அத­னை­வி­டுத்து இவ்­வாறு கருத்­துக்­களைத் திரி­பு­ப­டுத்திக் கூறு­வதன் மூலமே இனப்­பி­ரச்­சினை பூதா­க­ர­மா­கி­யுள்­ளது.
யாழ்ப்­பா­ணத்தை பொறுத்­த­மட்டில் கூட்­ட­மைப்பின் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கைகள் தீவி­ர­மாக இடம்­பெற்­று­ வ­ரு­கின்­றன. பெரு­வா­ரி­யான மக்கள் எமது கருத்­துக்­களை ஆர்­வத்­துடன் செவி­ம­டுத்து வருகின்றனர். இத்­த­டவை கணி­ச­மான மக்கள் வாக்­க­ளிப்­பார்கள் என்று எதிர்­பார்க்­கின்றோம். மக்கள் சீராக வாக்­க­ளிக்­காது போனால் அவர்­களின் வாக்­குகள் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட வாய்ப்­பாகப் போய்விடும்.
அதே­வேளை, அமை­தி­யான நேர்­மை­யான தேர்தல் நடை­பெ­று­வ­தையும் தேர்தல் திணைக்­களம் உறுதி செய்ய வேண்டும். வடக்கில் தற்­பொ­ழுது சுமு­க­மான சூழல் நில­வு­கின்­றது. இந்த நிலைமை தொடர வேண்டும். தேவை­யற்ற பிரச்­சி­னை­களை உரு­வாக்க எவரும் முனையக் கூடாது.
எவ்­வா­றெ­னினும் தேர்தல் சட்­ட­மீ­றல்கள் இடம்­பெ­று­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதி­க­ரித்து வரு­வ­தா­கவும் அறி­யப்­ப­டு­கின்­றது.
அர­சாங்கம் எதிர்­வரும் நாட்­களில் இந்­திய அர­சாங்­கத்தின் உத­வி­யுடன் கட்­டப்­பட்ட வீடு­களை மக்­க­ளுக்கு கைய­ளிக்­க­வுள்­ள­தா­கவும், அதே­போன்று மக்­களின் ஒரு­ப­குதி காணி­களை மீண்டும் அவர்­க­ளிடம் கைய­ளித்­து­விட்டு வலி­காமம் பகு­தியில் சென்;று முகாம் அமைக்­க­வுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது. மக்­க­ளுக்கு வீடு­களை வழங்­கு­வதும், அவர்­களின் காணி­களை மீளக் கைய­ளிப்­பதும் வர­வேற்க வேண்­டிய விடயம். எனினும் இதனை தேர்தல் நோக்­கோடு செய்­வது அழ­கல்ல.
அதே­வேளை, ஒரு பகு­தியை விட்டு மறு­ப­கு­தியில் இரா­ணுவம் குடி­யே­று­வதன் மூலம் மக்­க­ளுக்கு எந்தப் பயனும் கிட்டப் போவ­தில்லை. அங்கும் மக்­க­ளுக்கு சொந்­த­மான காணி­க­ளையே இரா­ணுவம் நாட முனை­கின்­றது. இவ்­வா­றான நட­வ­டிக்­கையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. மக்­களின் சொந்தக் காணியை முழு­மை­யாக அவர்­க­ளிடம் ஒப் ­ப­டைக்க முன்­வர வேண்டும். ஒன்­றி­லி­ருந்து மாறி மற்­று­மொன்­றுக்கு செல்­வதால் ஏதேனும் பயன் உண்டா என்று சிந்­தித்துப் பார்ப்­பது அவ­சி­ய­மாகும்.
இதே­வேளை, தேர்­தலை முன்­னிட்டு அபி­வி­ருத்திப் பணிகள் பல­வற்றை வடக்கில் அர­சாங்கம் முடுக்­கி­வி­ட­வுள்­ள­தா­கவும் கூற ப்­ப­டு­கின்­றது. இதன் ஒரு கட்­ட­மா­கவே ஓமந்­தை­யி­லி­ருந்து கிளி­நொச்சி வரை புகை­யி­ரத சேவை ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அதே­போன்று, வேலை வாய்ப்­புக்கள், நிவா­ர­ணங்கள் என்­ப­வற்­றையும் அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாகத் தெரிய வரு­கி­றது. தேர்தல் காலத்தில் இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் எந்­த­ளவு தூரம் ஏற்­றுக்­கொள்ளக் கூடி­யவை என்­பது சிந்­திக்க வேண்­டிய ஒன்­றாகும். வடக்கின் அபி­வி­ருத்­தியை நாம் முழு­மை­யாக ஆத­ரிக்­கின்றோம்.
எனினும் இவை­ யாவும் வெளி­நாட்டு உதவித் தொகையில் மேற்­கொள்­ளப்­பட்­ட­வை­யாகும். வெளி­நாட்டு உத­வியில் மேற்­கொள்­ளப்­பட்ட அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களைக் கொண்டு அர­சாங்கம் பயன் பெற முனை­வது மக்­களை ஏமாற்றும் செய­லாகும். இது­வரை வட­ப­குதி மக்­களின் தேவைகள் புறக்­க­ணிக்­கப்­பட்டே வந்­தன. தேர்தல் என்ற ஒரே கார­ணத்­துக்­கா­கவே இவை யாவும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இது தொடர்பில் மக்கள் நன்­க­றிந்து வைத்­துள்­ளனர்.
இவை அனைத்­துக்கும் மேல், சுதந்­திர தேர்தல் பொதுச் சேவைக்­குழு ஒன்று இல்­லாத சூழ்­நி­லையில் இந்தத் தேர்தல் நடை­பெ­று­கின்­றது. எனவே வாக்­க­ளிக்கும், வாக்கு எண்ணும் செயற்­பா­டு­களில் துஷ்­பி­ர­யோ­கங்கள் இடம்­பெ­று­வ­தற்­கான சாத்­தியக் கூறுகள் அதி­க­மா­கவே உள்­ளன. தேர்தல் கட­மை­களில் அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப் ­படும் அரச ஊழி­யர்கள் சேவையில் ஈடு­ப­ட­வுள்­ளனர். இதனால் தேர்தல் என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே அமையும் என்று நாம் அஞ்­சு­கின்றோம்.
எனவே, பக்­கச்­சார்­பற்ற அரச அதி­கா­ரி­க ளைச் சேவையில் அமர்த்தி தேர்தல் சட்ட விதி­க­ளுக்­க­மைய நேர்­மை­யான தேர்­தலை நடத்த தேர்தல் திணைக்­களம் முன்­வ­ர­வேண்டும். வாக்­க­ளிக்கும் மற்றும் வாக்கு எண்ணும் நிலை­யங்­களில் கட­மை­யாற்­று­வோரின் செயற்­பா­டு­களின் வாயி­லா­கவே நேர்­மை­யான தேர்­தலை உறுதி செய்யக் கூடியதாக இருக்கும்.
இதேவேளை, தேர்தல் கண்காணிப்பாளர் களும் தேர்தல் ஆரம்பம் முதல் முடிவு வரை தமது கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். தேர்தல் குளறுபடிகள் இடம்பெறுமானால் அது ஒரு போதும் ஜனநாயகத் தேர்தலுக்கு வழிச மைக்காது போகும்.
தேர்தல் தொடர்பில் பல்வேறு விடயங் களை நாம் அறிந்து வருகின்றோம். எதிர் வரும் நாட்களில் அமைச்சர்கள் சிலர் வட பகுதிக்கு வந்து முகாமிட்டு இருந்து தேர் தல் கடமைகளில் ஈடுபடவுள்ளதாக அறிய முடிகின்றது. எவ்வாறிருப்பினும் முறை யான தேர்தல் ஒன்றுக்கு வழிவகுப்பது சகல தரப்பினரதும் கடப்பாடாகும். அதன் மூலமே மக்கள் மத்தியில் உள்ள அச்சத் தைப் போக்கக் கூடியதாக இருக்கும் என் றும் அவர் தெரிவித்தார்.

ad

ad