புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2013

தகவல் துறையின் முந்திய செய்தி

தீக்குளித்து இறந்தவர் தமிழரா? திபத்தியரா? சந்தேகம் தொடர்கிறது

ஜெனிவாவில் ஐ.நா.முன்பாக  தீக்குளித்தவர் இன்று மாலை லவுசான் சூவ் வைத்தியசாலையில் மரணமானார்.
இறந்தவர் தமிழரா அல்லது திபெத்தியரா என்பதில் சந்தேகம் நிலவுவதாக ஜெனிவா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உடை அணிந்த ஒருவரின் படத்தை காவல்துறையினர் கண்டெடுத்திருந்தனர். இதனை வைத்து அவர் ஈழத்தமிழராக இருக்கலாம் என ஆரம்பத்தில் காவல்துறையினர் சந்தேகத்த போதிலும் தீக்குளித்தவருக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட கோவை ஒன்றில் திபெத்தில் தீக்குளித்து இறந்தவர்களின் படங்கள் மற்றும் செய்திகளும் காணப்பட்டதாகவும் எனவே அவர் திபெத்தியராக இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக ஜெனிவா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீக்குளித்தவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் அல்லது 0041 22427 7510 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தகவல் வழங்குமாறு ஜெனிவா காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
அதிகாலை ஒருமணியளவில் ஜெனிவா ஐ.நா. பகுதியில் ரோந்து சுற்றி வந்த காவல்துறையினர் ஒருவர் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டு அவரை ஜெனிவா வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர். அதன் பின்னர் கடுமையான எரிகாயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் லவுசான்  சூவ் வைத்தியசாலைக்கு உலங்குவானூர்தியில் எடுத்து சென்றனர். அங்கு மாலை 4.30மணிக்கு அவர் இறந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர் தீக்குளித்த இடத்தில் சிறிய பிளாஸ்ரிக் கொள்கலன் ஒன்று எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் அதிலேயே அவர் எரிபொருளை எடுத்து வந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர் மயக்கமடைந்திருந்தால் அவர் யார் என்ற விபரத்தை பெற முடியாமல் போய்விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் கல்வி கற்றுக்கொண்டிருந்த முருகதாஸ் என்ற தமிழ் இளைஞர் ஜெனிவா ஐ.நா.முன்றலில் தீக்குளித்து இறந்தார் என்றும் இலங்கையில் தமிழர்கள் படும் துன்பங்களை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவதற்காக அவர் இதனை செய்தார் என்றும் ஜெனிவா பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அவ்வாறு தமது இனத்தின் துன்பத்தை வெளிப்படுத்தவே தமிழரோ அல்லது திபெத்தியரோ தீக்குளித்து இறந்துள்ளார் என்றும் ஆனால் அவர் யார் என அடையாளம் காண முடியாமல் இருப்பதுதான் மிகப்பெரிய அவலம் என்றும் ரிபூன் டி ஜெனிவ் என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.
டினகதிர் 

ad

ad