புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2013

திண்டிவனம் : தேமுதிக –வி.சிறுத்தை கோஷ்டி மோதல்
திண்டிவனம் அருகே உள்ள முன்னூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். தே.மு.தி.க. தொண்டர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தமிழரசிக்கும் நேற்று முன்தினம்
திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ. வெங்கடேசன் வந்து மணமக்களை வாழ்த்தி சென்றார்.


அவர் சென்ற பின்பு முன்னூர் பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 20 பேர் வந்து ஆனந்தராஜிடம் இங்கே நீ தே.மு.தி.க. கட்சியை வளர்க்க பார்க்கிறாயா? என்று கேட்டு தகராறு செய்தனர். பின்னர் ஆனந்தராஜை அவர்கள் தாக்க முயன்றனர். இதை தடுக்க வந்த ஆரோக்கியதாஸ், சைமன் ஆகிய 2 பேரையும் தாக்கினார்கள்.
மேலும் அங்கிருந்த டியூப் லைட்டுகள் மற்றும் வேன் ஆகியவைகளை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். தாக்குதலில் காயமடைந்த ஆரோக்கியதாஸ், சைமன் ஆகியோர் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து பிரம்ம தேசம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையொட்டி முன்னூர் பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சார்லஸ், விஜயஆனந்த், ஆல்பர்ட், ஜார்ஜ், ஜான்சன், மரியதாஸ் உள்பட 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு முன்னூர் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது தே.மு.தி.க.வை சேர்ந்த ஆனந்தராஜ் உள்பட 15 பேர் அங்கு சென்று தே.மு.தி.க. கொடியை நீ பிடுங்கி போட்டாயா என்று கேட்டு அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
உடனே விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சார்லசும், அவரது தாயார் ரோஸ்மேரியும் அங்கு வந்து அவர்களிடம் சிலம்பரசனிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள்? என்று தட்டி கேட்டனர்.  இதனால் அவர்கள் கோபம் அடைந்து சார்லசை கத்தியால் குத்தி தடியால் தாக்கினார்கள். இதில் அவர் காயம் அடைந்தார். திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ரோஸ்மேரியும் பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக ஆனந்தராஜ், எத்திராஜ், ஸ்ரீதர், சைமன் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மோதல் சம்பவம் தொடர்பான வழக்கில் மரியதாஸ் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து முன்னூர் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மோதல் ஏற்படாமல் தடுக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ad

ad