புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2013

நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் தேவை: இலங்கை
மனித உரிமை பாதுகாவல்கள் மீது நடத்தப்படுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை தரவேண்டும் என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் ஜெனீவாவுக்கான வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
தமது இலங்கை விஜயத்தின் போது, தன்னை சந்தித்த மனித உரிமைக் காப்பாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டியுள்ளதாக முன்னதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை குறிப்பிட்டிருந்தார்.
மனித உரிமைகள் பேரவையின் 24வது அமர்வு ஆரம்பத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
பின்னர் தமது நேரத்தின் போது இதற்கு பதிலளித்த இலங்கை பிரதிநிதி, நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தின்போது சுதந்திரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
இலங்கை வன்முறையற்ற ஒரு சமூகத்தை கொண்டிருக்கிறது. அத்துடன் மனித உரிமை, சமய சமூகங்களின் பாதுகாப்பவர்களை பாதுகாப்பதில் இலங்கை அரசாங்கம் முழுமையாக ஈடுபடடுள்ளது என்று ரவிநாத ஆரியசிங்க சுட்டிக்காட்டினார்.

ad

ad