புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 செப்., 2013

கிளிநொச்சி தர்மபுரத்தில் இடம்பெற்ற த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில்  தேனிசைச் செல்லப்பாவின் பாடல் வெளியிடப்படது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கிளிநொச்சி தர்மபுரப் பகுதியில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் செ.புஸ்பராசா தலைமையில் நேற்று மாலை 4மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணியளவில் நிறைவு பெற்றது.
இப் பரப்புரைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சி.சிறீதரன், வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ப.அரியரத்தினம், த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் நாவை குகராசா, கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள், சு.தயாபரன், மா.சுகந்தன்,சி.தவபாலன், வி.சுவிஸ்கரன், சி.சுப்பையா பளைப் பிரதேச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைப்பாளர் சாந்தன், ,கட்சி செயற்பாட்டாளர்கள் தி.சிவமாறன், மா.ஜெகன், கண்டாவளை வர்த்தக சங்கத் தலைவரும் முதியோர் சங்கத் தலைவருமான ஸ்ரீதரன், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தேனிசைச் செல்லப்பா அவர்களினால் பாடப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான தேர்தல் பாடல்கள் இறுவெட்டு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களால் வெளியிடப்பட, அவற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ப.அரியரத்தினம், த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இன்நிகழ்வில் தேனிசைச் செல்லப்பா குழுவினர்களினால் பாடப்பட்ட 3 பாடல்கள்  அதில் ஒன்று இங்கே உங்களுக்காக

ad

ad