புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2013

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
இலட்சக் கணக்கான தமிழ் மக்களை
இனப்படுகொலை செய்த இராஜபக்சே அரசு உலக நாடுகளின் வற்புறுத்தலுக்குப் பிறகும்கூட போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கோ, உரிமைகளைப் பகிர்ந்தளிப்பதற்கோ முன்வரவில்லை.

அண்மையில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் ஆணையர் நவநீதம்பிள்ளை அவர்கள், ''இலங்கை மேலும் மேலும் ஒரு அதிகாரத்துவ அரசாகவே மாறி வருகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். 
இந்நிலையில் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு இராஜபக்சே அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அதில் கலந்துகொள்ளக் கூடாது என இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளில் எதிர்ப்பு எழுந்துள்ளது. உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்களும் அதையே வலியுறுத்தி வருகிறார்கள். 
எனவே, இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். தமது நிலையை மத்திய அரசு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் எனவும் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 7-9-2013 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் சார்பாக சென்னையில் எனது (தொல்.திருமாவளவன்) தலைமையிலும், 
12-9-2013 அன்று பிற மாவட்டத் தலைநகரங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

ad

ad