புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2013


முதல்வராக பதவியேற்க உள்ள சி.வி.விக்னேஸ்வரன், 1939 அக்., 23ல், கொழும்பில் பிறந்தார். இவரது பெற்றோர், வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் அருகே மணிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள். தந்தை கனகசபாபதி, அரசுப் பணியில் இருந்தார். அதனால், அவரது குடும்பம் அடிக்கடி வெவ்வேறு இடங்களில் குடியேறியது.விக்னேஸ்வரன் துவக்க கல்வியை, "குருநாகல் கிரைஸ்ட்ச் சர்ச்' கல்லூரியிலும், அனுராதாபுரம் பள்ளியிலும் படித்தார். பி.ஏ., படிப்பை, லண்டன் பல்கலைக் கழகத்திலும்; சட்டப்படிப்பை, கொழும்பு பல்கலையிலும் முடித்தார்.
1962ல், சட்டக் கல்லூரி மாணவர் சங்க தலைவராக இருந்தார்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதி:

கடந்த, 1979 மே, 7ல், நீதிபதியானார். துவக்கத்தில் மட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் மாவட்ட கோர்ட்களில் பணியாற்றினார். 1987ல், கொழும்பு மாவட்ட நீதிபதியாக பதவியேற்றார். 1988ல், ஐகோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். பின், 2001ல், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக உயர்ந்தார். 2004 வரை அப்பதவியில் இருந்தார். —

ad

ad