புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2013

பளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை தாக்க முற்பட்ட ஈபிடிபி
பளையில் நாளை சனி கிளிநொச்சி வேட்பாளர்களை ஆதரித்து நாடாத்தவிருந்த பரப்புரைக் கூட்டத்திற்கு முன்னாயத்தப் பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களை ஈபிடிபியினர் தாக்க முற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளன.
இன்று இரவு வெள்ளி இரவு 9.20 மணியளவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஈபிடிபி வேட்பாளராக போட்டியிடும் விடுதலைப் புலிகளின் முன்னாள் விளையாட்டுத்துறைப் பெறுப்பாளராக இருந்து
வெளிநாட்டில் இருந்து வந்த அன்ரன் அன்பழகனுடன் இணைந்த குண்டர் குழுவே கூரிய ஆயுதங்கள் சகிதம் ஆதரவாளர்களையும் ஒலிபெருக்கி வாகனத்தையும் தாக்க முற்பட்டுள்ளனர்.

இதையடுத்து உடனே பளை பொலிசாருக்கு அறிவித்ததும், சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றதாகவும் அங்கு விசாரணை என்று கூறி கூட்டமைப்பின்; செயற்பாட்டாளர்களின் முறைப்பாட்டை பதிவு செய்யாமல் ஈபிடிபி யின் செயற்பாட்டை நியாயப்படுத்தியுள்ளனர்.

பொலிஸாரின் நடவடிக்கை பக்கச்சார்புத் தன்மையைக் காட்டுவதாக கூறிய செயற்பாட்டாளர் இந்நிலையை கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தனர்.

ad

ad