புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2013

அமெரிக்கா அரசியல் ரீதியில் இலங்கையை சீரழிக்கிறது; குற்றஞ்சாட்டுகிறார் பாதுகாப்பு செயலர் 
அமெரிக்கா இலங்கையின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளையே தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.


கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இலங்கையின் நலன்களைச் சீரழிக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக, அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

30 வருடங்கள் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்த பின்னர், ஜனநாயகத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் தனது அதிகாரங்களைக் கொண்டு செயற்படுத்தி வருகின்ற போதிலும், அமெரிக்கத் தூதரகம் அவற்றை வலுவற்றதாக்கியுள்ளது.

நாட்டில் பல கட்சிகள் இருக்கின்றன. இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த போதும் கூட நாம் தேர்தல்களை நடத்தினோம். எனவே ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணி மீது குற்றம்சாட்டுவது நியாயமற்றது.

தெற்கில், அமெரிக்க தூதரகத்தின் பின்னணியுடன் எந்த மட்டத்திலும் தேர்தல்களிலும் அவர்களால் வெற்றி பெறமுடியாது. எனினும் சில வங்குரோத்து அரசியல் கட்சிகள் கூட அமெரிக்கத் தூதரகத்தைப் போன்றே எம்மீது குற்றம் சுமத்துகின்றன.

அத்துடன் 18வது திருத்தச்சட்டத்தின் மூலம், இலங்கை ஜனாதிபதியின் பதவி வரம்பு நீடிக்கப்பட்டதை மேற்குலக நாடுகள் விமர்சிக்கின்றன. ஆனால் அண்மையில் ஜேர்மனிய சான்ஸிலர் ஏஞ்சலா மேர்க்கல், மூன்றாவது முறையாக அந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும் தமிழ் மக்களுக்கு உத்தரவிட்ட போது, மேற்குலக சக்திகள் அதற்கு எதிராக எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை.

மேலும் போரில் பிரபாகரன் உயிர் தப்பியிருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறைக்கைதியாகவே இருந்திருக்கும். அந்த கட்சியினால் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியாது.

வடக்கு மாகாணசபைத் தேர்லில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியானது பிரிவினைவாத உணர்வுகளை ஊக்குவித்துள்ளது என்று தவறாக எண்ணி செயற்பட்டால் அது மோசமான தவறாகி விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=184352325427399250#sthash.hNuJtcS1.dpuf

ad

ad