புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2013


       ""ஹலோ தலைவரே... எல்லாக் கட்சிகளும் எம்.பி. தேர்தலுக்காகப் பரபரப்பாகிக்கிட்டிருக்குது. சும்மா இருக்கிற கட்சிகளைக்கூட, யாருகூட கூட்டணின்னு கேட்டு மீடியாக்கள் உசுப்பேத்துறதால அரசியல் வட்டாரம் விறுவிறுப்பா இருக்குது.''


""தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் அ.தி.மு.கதான் இந்த எம்.பி. தேர்தலுக்கான ஏற்பாடுகளை முன் கூட்டியே தொடங்கி ஸ்பீடா போய்க் கிட்டிருக்குது. மாவட்டவாரியா தேர்தல் பொறுப்பாளர்களை ஜெ. நியமிச்சதால அவங்களும் ஃபீல்டுல இறங்கிட்டாங்க. அடுத்தகட்ட மூவ் என்னவாம்?''

""எம்.பி. தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் பணம் கட்டலாம்ங்கிற அறிவிப்பு விரைவில் வரும்னு அ.தி.மு.க வட்டாரம் சொல்லுது. கூட்டணி விஷயமா சோ வந்து பார்த்துட்டுப் போனதும் ஜெ. டென்ஷனாயிட்டாராம். சோ மேலேயும் ஜெ.வுக்கு வருத்தமாம். பா.ஜ.க ஜெயிக்கணும், நரேந்திரமோடி பிரதமராகணும்ங்கிறதுக்காக தன்னைப் பயன்படுத்திக்கப் பார்க்குறாங்கங் கிறதுதான் சோ மீதான ஜெ.வின் வருத்தத்துக்குக் காரணம். தன்னை பிரதமர் வேட்பாளராக லாபி பண்ணாமல், தன்னை மோடிக்கு ஆதரவா வரச்சொன்ன சோவின் வார்த்தைகளை ஜெ ரசிக்கலை. மோடி பிரதமராக உதவி செய்தால், துணைப்பிரதமர் பதவி உங்களுக்குத்தான்ங்கிற உத்தரவாதத்தைக்கூட சோ தரலையேன்னு ஜெ. கோபப்பட்டிருக்கிறார். அந்த போஸ்டிங்கிற்கு சுஷ்மா ஸ்வராஜை பா.ஜ.க வட்டாரம் முன்னிறுத்துற தகவலும் ஜெ.வுக்குத் தெரிந்திருக்குது.'' 

""மோடி விருப்பப்பட்டபடிதான் ஜெ.வை சோ சந்தித்தார்னு போன முறையே நாம பேசியிருந்தோமே!''

""மோடிக்கும் ஜெ.வுக்கும் நல்ல நட்புறவு உண்டுங்கிறது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனா,  மோடிக்கு முன்னாடியிலிருந்தே ஜெ.வுக்கு பிரதமராகும் ஆசை இருக்குது. அதற்கான காய்களையும் அவர் நகர்த்திக்கிட்டிருந் தாரு. இப்ப எல்லோரும் மோடியை முன்னிறுத்துவதில் ஜெ.வுக் குக் கோபம். பா.ஜ.க. இளைஞர் மாநாட்டுக்காக திருச்சிக்கு வரும் மோடி, சென்னையில் ஜெ.வை சந்திக்க விரும்புறாரு. லோக்கல் பா.ஜ.க.வினரும் இதற்காக ட்ரை பண்றாங்க. ஆனா, இதுவரைக்கும் ஜெ. தரப்பில் அப்பாயிண்ட்மெண்ட் க்ளிய ராகலை. அதே நேரத்தில் ஃபார்வர்டு ப்ளாக் கட்சித் தலைவர் பிஸ்வாஸுக்கு ஜெ அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்காரு. தமிழக பா.ஜ.க.வினர் தங்களோடு ம.தி.மு.க., தே.மு.தி.க.ன்னு கட்சிகளைச் சேர்த்து ஒரு புதிய அணியை லீட் பண்ண நினைப்பதை ஜெ. சுத்தமா விரும்பலையாம். ஆனா, மோடியோ ஜெ.வை நேரில் சந்தித்து பா.ஜ.க. கூட்டணிக்கு அ.தி.மு.க.வை கொண்டு வந்திடணும்னு நினைக்கிறாராம்.''

""இத்தனைக் கட்சிகளும் அ.தி.மு.க பக்கம் வந்தால் அது பலமான கூட்டணியாகத்தானே இருக்கும்?''

""ஜெ.வைப் பொறுத்தவரை அவர் விரும்புகிற மாதிரியான கூட்டணிதான் அமையணும். பா.ஜ.க.வில் சுப்ரமணியசாமி போன்றவங்களுக்கு சீட் கொடுத்தால், அவங்களையெல்லாம் ஆதரிச்சுப் பேசணுமேன்னு ஜெ. யோசிக்கிறார். தன்னைப் பிரதமர் வேட்பாளரா முன்னிறுத்தும் கட்சிகளோடுதான் கூட்டணிங்கிறது அவரோட முடிவு. ஏற்கனவே தன் கூட்டணியில் இருக்கிற சி.பி.எம். பிரகாஷ்காரத்கிட்டே அதைச் சொல்லிட்டாரு. இப்ப அ.தி.மு.க. எம்.பி.க்கள் தம்பிதுரைக்கும், மைத்ரேயனுக்கும் புது அசைன்மெண்ட் கொடுத்திருக்காரு.''

""என்ன அசைன் மெண்ட்?''

""வடமாநிலத்தில் உள்ள கட்சித் தலைவர் களை சந்தித்து, பிரதமர் வேட் பாளராக ஜெ.வை முன்னிறுத்து வதை வரவேற்கிறோம்னு அறிக்கை கொடுக்க வைப்பதுதான் அவங் களுக்கான அசைன்மெண்ட். அவங்களும் தீயா வேலை செஞ்சிக் கிட்டிருக்காங்க. தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடனான கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்தணும்னு ம.ம.க.கிட்டேயும் புதிய தமிழகம் கிட்டேயும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான நால்வர் அணிக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டிருக்குது. அவங்களும் புதன்கிழமையன்னையி லிருந்து வேலையை ஆரம்பிச்சிட் டாங்க.''

""அந்த இரண்டு கட்சிகளும் ராஜ்யசபா எம்.பி. தேர்தல் சமயத்தில் தி.மு.க.வை ஆதரித்த கட்சி களாச்சே?''

""அப்ப தி.மு.க.வுக்கும் தே.மு.தி.க.வுக்கும் நேரடி ஃபைட். அதில் விஜயகாந்த் கட்சி ஜெயிப்பதைவிட, கனிமொழியே வரட்டும்ங்கிறது ஜெ.வின் நிலைப்பாடு. அதனால ம.ம.க.வும் பு.த.வும் அந்தப் பக்கம் போனதை பெருசா எடுத்துக்கலை. ஆனா, இப்ப தன்னோட பிரதமர் கனவு நிறைவேற இந்தக் கட்சிகள் வேணும்னு நினைக்கிறார். தி.மு.க. வோடு எம்.பி தேர்தலில் மற்ற கட்சி கள் கூட்டணி சேராதுன்னும், அ.தி.மு.க.தான் அதிக சீட்டு களை ஜெயிக்கும்ங்கிறதும் ஜெ.வின் கணக்கு. அதனடிப்படையில், ம.ம.க.வுக்கு 1 எம்.பி. சீட்டு தர்றோம்னும், ஜெயித்தபிறகு வாய்ப்பிருந்தால் மத்திய அமைச்சரவையில் இடம்னும் ஜவாஹிருல்லாகிட்டே ஓ.பி.எஸ். டீம் பேசியிருக்குது. அதேமாதிரி புதிய தமிழகம் கிருஷ்ணசாமிகிட்டேயும் இந்த டீம் பேசியிருக்குது.''

""தொகுதிப் பொறுப்பாளரா நியமிக்கப்பட்ட மந்திரிகள் என்ன மனநிலையில் இருக்காங்க. எப்படி வேலை  செய்றாங்க?''

""இப்போதைக்கு மந்திரிபதவிக்கு ஆபத்தில்லைங்கிற நிம்மதியான மனநிலையில் இருக்காங்க. அதே நேரத்தில், கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற சிறிய கட்சிகளை வச்சிக்கிட்டு, பிரதமர் வேட்பாளர்ங்கிற கணக்கோடு எப்படி ஜெயிக்க முடியும்னு தெரிய லையேன்னு சுமார் 20 மந்திரிகள் பதட்டத்தோடும் பயத்தோடும் இருக்காங்களாம். லோக்கலில் மக்களோட மனநிலை எப்படி இருக்குதுன்னு அவங்களுக்குத்தானே தெரியும். ஆனா, ஜெ. தன்னைப் பிரதமர் வேட்பாளரா முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கணும்னு உறுதியா இருக்கிறதால, அதற்கு எதிரான எல்லா முயற்சிகளையும் முறியடிக்க நினைக்கிறார். எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் பச்சமுத்து மேலே இப்ப அவர் கவனம் திரும்பியிருக்குதாம்.''

""இது என்ன புதுத் திருப்பம்?''



""பச்சமுத்து காலேஜ் நடத்துறாரு, டி.வி. நடத்துறாரு, கட்சி நடத்துறாரு.  அதெல்லாம் போகட்டும். பா.ஜ.க கூட்டணிக்கு கட்சி களை சேர்க்க வேண்டிய வேலைகளை இவர் ஏன் பார்க்குறாருங் கிறதுதான் ஜெ.வோட கோபத்துக்குக் காரணம். விஜயகாந்த்தையும் வைகோவையும் பா.ஜக கூட்டணிக்கு கொண்டு வரவும், தேர்தல் செலவுகளை கவனிக்கவும் ரெடியாகி அதற்கான வேலைகளை செய்வதையும் பற்றி ஜெ.வுக்கு ரிப்போர்ட் வந்திருக்குது. இதை யடுத்து, பச்சமுத்துவோட மெடிக்கல் காலேஜுக்கான அனுமதியை ரத்து செய்யும்படி மாநில அரசின் சார்பில் இந்திய மெடிக்கல் கவுன்சிலுக்கு கடிதம் எழுதப் போறாங்களாம். அதே நேரத்தில், டெல்லியில் காங்கிரஸ் வட்டாரத்திலும் பச்சமுத்து மேலே கடுப்பா இருப்பதால அங்கிருந்தும் மெடிக்கல் காலேஜ் அனுமதியை ரத்து செய்ய மூவ் நடக்குது. விரைவில், பச்சமுத்துவை நோக்கி அம்புகள் பாயும்னு தகவல்கள் வருது.''

""தன்னோட பிரதமர் கனவு நிறைவேற எந்தத் தடையும் இருக்கக்கூடாதுங்கிறதுதான் ஜெ.வின் நிலைப்பாடா?''

""ஆமாங்க தலைவரே.. பெங்களூரில் நடக்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞரை மாற்றக்கூடாதுன்னு முதலில் மனு செய்தவர், இப்போ நீதிபதியையும் மாற்றக்கூடாதுன்னு சுப்ரீம்கோர்ட்டில் மனு செய்திருப்பதற்கும் அதுதான் காரணம். செப்டம்பர் 12-ந் தேதியோடு ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. முறைப்படி, இந்த 30-ந் தேதி அவர் ரிடையர்டாகவேண்டும். ஆனால், அவரே பதவியில் தொடர்ந்து நீடிக்கணும்னும், அப்போதுதான் வழக்கு விசாரணை தொய்வின்றி முடியும்னும் ஜெ.வின் மனுவில் சொல்லப் பட்டிருக்குது.''

""யாரு.. இதே வழக்கில் 100 முறைக்கு மேல் வாய்தா வாங்கிய அதே ஜெ.வா?''

""ஆமாங்க தலைவரே.. .. ஜெ.வின் மனுவை சுப்ரீம் கோர்ட்டும் அனுமதிச் சிருக்குது. நான்தான் ஜட்ஜ்மெண்ட்டும் எழுதுவேன்னு மனு போடாதது ஒண்ணு தான் பாக்கின்னு டெல்லி வக்கீல்கள் சொல் றாங்க. அதேநேரத்தில் ஜெ.வோ, இந்த வழக்கை சீக்கிரமா முடிக்கிறதுக்காக சுப்ரீம்கோர்ட் சீனியர் லாயர்களோடு தொடர்ந்து பேசிக்கிட்டிருக்கிறார். அவங்க ஆலோசனைப்படி பெட்டி ஷன்களைப் போட்டுக் கிட்டே இருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்னும், அதன்மூலம் மிஸ் க்ளீன்ங்கிற இமேஜோடு பிரதமர் வேட்பாளரா களமிறங்க லாம்ங்கிறதும்தான் அவரோட கணக்கு. அதனால தான் தீர்ப்பு சொல்லும் வரை இந்த நீதிபதியே இருக்கணும்னு பெட்டிஷன் போட்டிருக்காரு.''


""தி.மு.க ஏரியாவில் என்ன நடக்குது?''

""டெல்லியிலிருந்து  தமிழகம் வரையிலான மூவ்களை சொல்றேங்க தலைவரே... 2ஜி தொடர் பான நாடாளுமன்றக் கூட்டுக்குழுவான ஜே.பி.சியின் கூட்டம் அடுத்த வாரம் நடக்குது. அதன் அறிக்கையும் நாடாளுமன்றத்தில் வைக்கப்படும். ஏற்கனவே ஆ.ராசா எழுத்துப்பூர்வமா கொடுத்த வாக்குமூலத்தை ஜே.பி.சியின் அறிக்கையில் சேர்ப்பதில்லைங்கிறதுதான் அதன் தலைவர் சாக்கோவோட முடிவு. ராசா எழுதிய கடிதத்தை ஜே.பி.சியின் மற்ற உறுப்பினர்களுக்கு அவர் அனுப்பியிருக்கிறார். அதில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிலிருந்து அனைத்து நட வடிக்கைகளும் பிரதமருக்கும் நிதி யமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் தெரிவிக்கப்பட்டு, ஒப்புதல் வாங்கப்பட்டது தான்னு விரிவா சொல்லி யிருப்பதோடு, தான்தான் தவறு செய்திருப்பதாக பிரதமர் நினைத்திருந்தால் 2009-ல் மீண்டும் தனக்கு அதே தொலைத் தொடர் புத் துறையைத் தந்திருப் பாரான்னும் கேட்டிருக் காரு.''

""சரிதானே?''

""அதுமட்டுமில் லீங்க தலைவரே.. 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா வை மட்டும் குற்றம் சாட்டி  பலியாக்குவதை தி.மு.க விரும்பலை. அது கட்சிக்குத் தேசிய அளவில் ஏற்படுத்தும் இமேஜ் பாதிப்பை உணர்ந்திருப்பதால, ஜே.பி.சி.கிட்டே எல்லா டாக்குமெண்ட்டு களையும் கேட்டிருக்கிறார் தி.மு.க உறுப்பினரான டி.ஆர்.பாலு. அட்டர்னி ஜெனரல் வாகன்வதி கொடுத்த குறிப்பை ராசா திருத்தினார்னு சொல்லப் படுவதை ராசாவும் தி.மு.க.வும் கடுமையா மறுப்பதோடு ஒரிஜினல் டாக்குமெண்ட்டுகளைக் காட்டுங்கன்னு கேட்டிருக்காங்க. டாக்குமெண்ட்டுகளெல்லாம் வெளிப்பட்டால் பிரதமருக்கும் நிதியமைச்ச ருக்கும் நெருக்கடிதான். அதனால காங்கிரஸ் இந்த விஷயத்தில் கடுமையான யோசனையில் இருக்குது. இதுதான் டெல்லி சம்பந்தப்பட்ட தி.மு.க நியூஸ்.''

""தமிழக நிலவரம்?''

""எம்.பி. தேர்தலை தி.மு.க தனித்தே சந்திக்கலாம்னு மு.க.ஸ்டாலின் பேசியது பற்றி போனமுறை நாம பேசினோமே.. அதுதான் கட்சிக்காரர்கள் மத்தியிலும் பலமா ஒலிக்குது. ஸ்டாலினைப் பொறுத்தவரை, மதுரை தொகுதியில் பி.டி.ஆர் மகன் தியாகராஜனை நிறுத்தலாம்னு நினைக்கிறாராம். அதுபோல, தேனியில பொன்.முத்துராமலிங்கம். சிவகங்கை தொகுதிதான் மதுரை முன்னாள் மா.செ. வேலுச்சாமியின் சொந்த ஏரியா. அதனால அங்கேயோ, அல்லது போன முறை ராமநாதபுரத்  தில் ஜெயித்த ரித்தீஷுக்கு இந்த முறை சீட் கிடையாதுங்கிறதால அந்தத்  தொகுதியிலோ நிற்கவைக்கலாம்ங்கிற கணக்காம். சம்பந்தப் பட்டவங்களும் அதற்கு ரெடியாகிக்கிட்டிருக் காங்களாம். தி.மு.க.வோடு காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் மதுரையில் களமிறங்கலாம்ங்கிறது கார்த்தி சிதம்பரத்தோட கணக்கு.''

""ஒவ்வொரு கட்சிக்கும் அந்தக் கணக்கு இருக்குமே?''

""ஆமா.. அதை நான் சொல்றேன். தே.முதி.க சார்பில் மதுரையில் சுதீஷை நிறுத்தணும்னு விஜயகாந்த் நினைக்கிறார். ஜெ.வோ வழக்கமா  மதுரையில் நிற்கும் சி.பி.எம்.முக்குப் பதில் சி.பி.ஐ.க்கு தரலாம்னும் அதுவும் தா.பாண்டியனை நிறுத்த லாம்னும் நினைக்கிறாராம். மோடியைவிட பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் ஜெ.தான்னு சொன்ன தா.பா.வுக்கு கிடைக்கும் பரிசாக மதுரைத் தொகுதி இருக்கலாம்னு பேச்சு உலவுது.''

அட்டைப் படம் : எஸ்.பி.சுந்தர்

ad

ad