புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 செப்., 2013

உ.பி. கலவரம்: பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கவால் கிராமத்தில் ஒரு பிரிவை சேர்ந்த பெண்ணை கடந்த மாதம் 27–ந்தேதி மற்றொரு பிரிவை சேர்ந்த ஷானவாஸ் என்பவர் கேலி கிண்டல் செய்தார்.



 இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்களான சச்சின் மற்றும் கவுரவ் ஆகியோர் சேர்ந்து ஷானவாசை அடித்து கொலை செய்தனர். இதனை அடுத்து ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்துள்ளது.  கலவரம் மற்ற பகுதிகளுக்கு பரவியதை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது.  அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் வரவழைக்கப்பட்டது.
கலவரக்காரர்களை கண்டவுடன் சுட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கலவரத்தில் பலியானவர் களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ad

ad