புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2013

சுவிஸ் பெண்ணின் கனவை நனவாக்கிய ஷாருக்கான்

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரசிகையின் கனவை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நனவாக்கியுள்ளார்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கரோலின் ஜெடர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2005ம் ஆண்டு கண் பார்வை பறிபோனது.

கரோலினுக்கு ஒரு கனவாம். பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மிகவும் பிடிக்கும் என்பதால் அவரின் முகத்தை தொட்டுப் பார்க்க வேண்டும் என்பது தான் அவரது கனவு.
இந்நிலையில் திருமணம் ஒன்றுக்காக இங்கிலாந்துக்கு சென்ற ஷாருக்கானுக்கு இது குறித்து தகவல் கிடைத்தது. இதையடுத்து ஷாருக்கான் கரோலினை சந்தித்து அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
இது குறித்து கரோலின் கூறுகையில், திடீர் என்று ஒரு நாள் ஷாருக் என் அருகே வந்து ஹலோ கரோலின் என்று கூறி என் தோளில் தட்டிக் கொடுத்தார்.
பின்னர் என்னை கட்டிப் பிடித்தார். நான் எப்படி இருக்கிறேன், லண்டன் பிடித்திருக்கிறதா என்று கேட்டார்.
மேலும் துபாய்க்கு போக வேண்டி இருப்பதால் சீக்கிரம் கிளம்ப வேண்டும், அதற்காக மன்னித்துக் கொள் என்றார்.
நான் அவரின் முகத்தை தொட்டுப் பார்க்க 8 ஆண்டுகளாக காத்திருந்தேன். தற்போது அவரின் முகத்தை தொடாமல் எப்படி அனுப்புவது.
கிளம்பும் முன்பு அவர் மீண்டும் என்னை கட்டிப்பிடித்தார். அப்போது அவரது முகத்தை தொட்டுப் பார்த்தேன்.
இந்த தருணத்தை நான் எப்பொழுதுமே மறக்க மாட்டேன் என்றும் நன்றி ஷாருக்கான் எனவும் தெரிவித்துள்ளார்.

ad

ad