புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2013

யாழ்ப்பாணம் தென்மராச்சி, வரணி பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரஷ் பிரேமச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்களது வேன் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். 

வரணி பிரதேசத்தில் புலனாய்வாளர்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார். இதன் போது அங்கிருந்த நபர் வரணி பிரதேசத்திலிருந்து இராணுவ முகாமிற்குள் ஓடியுள்ளார். இந்நிலையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவ்விடத்திலிருந்து செல்ல திட்டமிட்டுள்ளார். 

இரண்டு வேன்களில் சென்ற சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களுடைய வேனில் திரும்பும்போது இராணுவத்தினர்கள் அவர்களுடைய வேனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சுரேஷ் பிரேமச்சந்திரன் பயணித்த வேனுக்கும் இராணுவ முகாமிற்கும் 100 மீற்றர் தூர இடைவெளியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 15 - 20 துப்பாக்கி வேட்டுக்கள் வேனை நோக்கி சுடப்பட்டது. துப்பாக்கிச் சூட்டின் காரணமாக வேனின் கண்ணடாடிகள் உடைந்து வேன் சேதடைந்துள்ளது. வரணி மகா வித்தியாலய தேர்தல் வாக்குச் சாவடிக்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்களிப்பு ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

ad

ad