புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2013

ஜேர்மனி வாழ் தமிழ் உறவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தல் ஆணையத்தின் கும் வேண்டுகோள்

இலங்கைத் தீவின் தமிழீழத் தாயகத்து வட புல மக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் வட மாகாண தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கைத்தீவுக்கு வெளியே புலம்பெயர்ந்து வாழ்கின்ற
ஈழத் தமிழ் மக்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக்கான தேர்தலை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் ஐரோப்பாவில் தமிழர்கள் செறிவாக வாழும் நாடுகளில் ஒன்றான ஜேர்மனிய வாழ் தமிழ் உறவுகளுக்கான அறிவித்தல் ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் விடுத்துள்ளது.

இந்;த அறிவித்தல் முழுமையான விபரம் :


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினது அரசவையின் முதலாம் தவணை எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் நாளுடன் நிறைவடைகின்ற நிலையில் இரண்டாம் தவணைக்கான தேர்தல் முன்னேற்பாடுகள் புலம்பெயர் தேசங்களெங்கும் தீவிரமாகியுள்ளன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, தற்போதைய அரசவை இவ்வாண்டு (2013) ஒக்ரோபர் மாதம் 1 ம் திகதி நிறைவடையும்;நிலையில், இதன் இரண்டாவது அரசவைக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ளோம். இத் தேர்தல் ஒக்ரோபர் கடைசிவாரத்தில் நடைபெறவுள்ளது.

ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் 16 நாடுகளில் இத் தேர்தல்களுக்கான முன்னேற்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன. அந்தவகையில் ஜேர்மனியிலும் தேர்தல் ஆ;ணையம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் நடைபெறவிருக்கும் தேர்தலை சுதந்திரமாகவும், நீதியாகவும் நடாத்தி முடிக்க உங்கள் ஒத்துழைப்பைக் கோரி நிற்கின்றோம். அந்தவகையில் தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பணியாற்ற விரும்புபவர்கள் தயவுசெய்து எம்முடன் தொடர்பு கொள்ளவும்

ஜேர்மனி நாடு முழவதும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவரும், இத் தேர்தலில் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தி, தாம் விரும்பியவர்களைத் தம் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கக் கிடைத்துள்ள இச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தவேண்டும.; எங்கெல்லாம் தேர்தல் நடாத்தப்படவேண்டும் என்று யார் விரும்புகிறார்களோ, அவர்கள் தயக்கமின்றி எம்முடன் தொடர்புகொள்ளவும். வாக்களிப்பு நிலையங்களுக்கான இட ஒழுங்கு மற்றும் ஆளணி போன்றவற்றை எமது ஆலோசனையுடன் ஏற்படுத்தித் தரவேண்டும். ஆளணிகளைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழர் அல்லாதவர் வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றவேண்டும். அவர்கள் முன்னிலையில் வாக்களிப்பு நடைபெறவேண்டும்.

ஜேர்மனியில் பத்து மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடாத்தப்படும் இத் தேர்தலில், வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புபவர்கள், தேர்தல் ஆணையரினால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களுக்கான தகமைகள் அனைத்தையும் கொண்டிருக்கவேண்டும். அரசவை கலைக்கப்பட்ட குறுகிய காலத்தில் வேட்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல் இடம்பெறும் என்பதைக் கவனத்திற் கொள்ளவும். ஜேர்மனியைப் பொறுத்தவரையில், போட்டியாளர் ஒருவர் தனது நன்னடத்தையை உறுதிப்படுத்த Bundesamt für Justiz (ஜேர்மன் நீதித்;துறைக்கான கூட்டாட்சிப் பணிமனை) யினால் வழங்கப்படும்; நன்னடத்தைச் சான்றிதழை (Führungszeugnis ) தனது விண்ணப்பத்துடன் இணைத்தனுப்புதல் வேண்டும். இந்த நன்னடத்தைச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து, அதைப் பெற்றுக்கொள்ள சிறிது காலம் எடுக்கும் என்பதை போட்டியாளர்கள் கவனத்தில் கொண்டு, போட்டியிட விரும்புவோர் முன்கூட்டியே விண்ணப்பித்து இதைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்துகிறோம்.

முக்கிய திகதிகள் கீழே பட்டியலிட்டுத் தரப்பட்டுள்ளன:

1. பாராளுமன்றம் கலைப்பு ஒக்டோபர் 01, 2013
2. வேட்பாளர் வேட்புமனு கோரப்படுவது ஒக்டோபர் 02, 2013
3. வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாள் ஒக்டோபர் 08, 2013
4. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நாள் ஒக்டோபர் 10, 2013
5. வேட்பாளர் மனு மீளப் பெறும் இறுதி நாள் ஒக்டோபர் 12, 2013
6. நா.க.த. அரசாங்கத்தின் பொதுத் தேர்தல் ஒக்டோபர் 26, 2013


இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜேர்மன் நாட்டுக்கான தேர்தல் ஆணையாளர் கா.லக்ஸ்மன்; அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad