புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2013

யாழ்ப்பாணத்தில் தேர்தல் வன்முறைகள்! நாவற்குழியில் தமிழ் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
இன்று நாவற்குழி பகுதியில் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த தனது ஆதரவாளர்கள் பத்துப் பேர் மீது அடையாளம் காணப்படாத கும்பலொன்று தாக்குதல் நடத்தியிருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராகிய பாலசுப்பிரமணியம் கஜதீபன் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கையின் வட மாகாண சபைக்கான தேர்தல் இன்னும் ஒரு வார காலத்தில் நடைபெறவுள்ள நிலையில் இதில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் பலவும் பல இடங்களிலும் தீவிர பரப்புரை செய்வதில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதேவேளை, கட்சி ஆதரவாளர்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
இன்று மாலை நாலரை மணியளவில் நாவற்குழி பகுதியில் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த தனது ஆதரவாளர்கள் பத்துப் பேர் மீது அடையாளம் காணப்படாத கும்பலொன்று தாக்குதல் நடத்தியிருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராகிய பாலசுப்பிரமணியம் கஜதீபன் தெரிவித்திருக்கின்றார்.
இவர்களில் இருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது தங்களுக்குத் தெரியாத போதிலும், அவர்கள் சரளமாக சிங்களத்தில் தங்களுக்குள் உரையாற்றியிருந்ததாக கஜதீபன் கூறியுள்ளார்.
ஐதேக ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல்
இதற்கிடையில் தனது ஆதரவாளர்கள் இருவர் இரு தினங்களுக்கு முன்னர், மாற்றுக் கட்சியினரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளராகிய தியாகராஜா துவாரகேஸ்வரன் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு முறையிட்டிருந்த போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் கவலை வெளியிட்டிருக்கின்றார்.
தேர்தல் திணைக்களத்திலும் இதுபற்றி முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
எனினும் அச்சமான ஒரு சூழலிலேயே தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருந்த போதிலும், சிறு சிறு சம்பவங்கள் மாத்திரமே தேர்தல் பரப்புரை காலத்தில் இடம்பெற்று வருவதாக ஈபிடிபி கட்சியின் முதன்மை வேட்பாளராகிய சின்னத்துரை தவராசா கூறியுள்ளார்

ad

ad