புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2013

 வெள்ளவத்தை முதல் வடக்கு வரை நந்திக்கடலாக்க கூட்டமைப்பு முயற்சி; தனி ஈழப் போராட்டத்தை கொழும்பிலும் விஸ்தரித்து வாக்கு வேட்டைக்குத் திட்டமாம் 
"தனி ஈழப் போராட்டத்தை தென்னிலங்கை வரை விஸ்தரித்து அடுத்த தேர்தலில் தலை நகரத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கு வேட்டையை நடத்தும். வெள்ளவத்தை, வத்தளை முதல் வடக்கு வரை நந்திக் கடலாக மாற்றும் அபாயகரமான நடவடிக்கையையே கூட்டமைப்பு முன்னெடுக்கிறது.'
 
 
இவ்வாறு ஆளுந்தரப்பின் பங்காளிக் கட்சியான ஜாதிகயஹல உறுமய அச்சம் வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
"வடக்குத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு வெற்றிபெறு வதற்கு நேரடியாகவே அழுத்தம் கொடுத்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவ நீதம்பிள்ளை, சர்வதேச விசாரணைப் பொறிமுறை என்ற சவாலை முன்வைத்து இலங்கையை அச்சுறுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுய நிர்ணய ஆட்சியை உறுதி செய்ய முயற்சிக்கிறார். 
 
இது தான் ஐக்கிய நாடுகள் சபை, இந்தியா, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் ஆகிய வற்றின் நோக்கமாக உள்ளது'' என்று ஜாதிக யஹல உறு மயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
 
"கூட்டமைப்பின் இந்த அபாயகரமான பயணத்தை தோற்கடித்து, அதற்கு முற்றுப்புள்ளி வைக்க எம் இனத்தை படை திரட்டி களமிறக்கி மாபெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம். இதற்காக நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும், தனி நபருடனும் பேச்சு நடத்த தயாராக உள்ளோம்'' என்றும் அவர் தெரிவித்தார்.
 
கொழும்பு, இசுருபாயவிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
 
அமிர்தலிங்கத்தின் கதியே விக்னேஸ்வரனுக்கும் 1977ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தன்பின்னர், தமிழ் மக்கள் தனி ஈழத்துக்கு ஆணை வழங்கிவிட்டனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் கூறினார். 
 
அதன் பின்னர் இது விடயத்தில் இந்தியா தலையிட்டதையடுத்து, பிரபா கரனால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தில் அமிர்தலிங்கமும் பலியாகினார். 
 
அமர்தலிங்கத்துக்கு நேர்ந்த கதியே வடமாகாண முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், சுமந்திரன் எம்.பிக்கும் ஏற்படும்.
 
 
சிங்களவர்களுக்கு எதிரான
முதல் பிரசாரக்காரர் ஆயர்
நாட்டிலுள்ள சிங்கள மக்களுக்கு எதிராக தமிழ் மக்களிடையே பிரசா ரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பிரசாரக்காரர்களில் மன்னார் ஆயர் வண. இராயப்பு ஜோசப்பே முதல் ஆளாக இருக்கின்றார்.
 
 
 
 
கூட்டமைப்பின் அபாயகரமான பயணம்
 
வெள்ளவத்தை, மட்டக்குளி, வத்தளை முதல் வடக்கு வரை நந்திக் கடலாக்கும் அபாயகரமான நடவடிக்கையையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்கிறது.
 
இதற்கு நாம் இடமளித்தால், தமது தனி ஈழப் போராட்டத்தை கொழும்பிலும் முன்னெடுப்பர். தனி ஈழக் கோரிக்கையை முன்வைத்து இங்கும் வாக்குகேட்பர். இதைத் தோற்கடிக்க எம் இனத்தை ஒன்று சேர்த்து போராடுவோம் என்றார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=574352325627277421#sthash.CBot6Qk9.dpuf

ad

ad