புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2013



            ""ஹலோ தலைவரே... நாங்க பி.எம். வேட்பாளரை அறிவிக்க ரெடி, காங்கிரஸ் ரெடியான்னு சவால்விட்ட பா.ஜ.க முகாமி லேயே நெருக்கடி உண்டாயிடிச்சே?''

nakkeran
""ஆமாப்பா. நரேந்திரமோடியை பி.எம் வேட்பாளரா அறிவிப்பதற்கு அத்வானி இன்னமும் பிரேக் போட்டுக்கிட்டிருக்காரு. ஆர்.எஸ்.எஸ் தரப்பிலிருந்து மோடிதான் பிரதமர் வேட்பாளர்னு அறிவிக்க நெருக்கடி கொடுக்கப்படுது. பா.ஜ.க தலைவர் ராஜ் நாத்சிங்கும் ரெடி. ஆனா, சீனியர் தலைவரான அத்வானியும் அவரது ஆதரவாளர்களும் மோடியை முன்னிறுத்த யோசிப்பதால், ஆர்.எஸ்.எஸ். தரப்பிலிருந்தே இதற்கான சமாதான முயற்சிகள் நடக்குது. ஹரியானா, மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் பி.எம் வேட்பாளரை அறிவிக்கலாம்னு அத்வானி இழுத் தடிக்கிறாரு. ஆனாலும், மோடியை எந்த நேரத்திலும் பி.எம். வேட் பாளரா அறி விப்பதற்கான எல்லா திட்டங் களும் ரெடியா யிடிச்சின்னு வியாழக்கிழமை யன்னைக்கு டெல்லியிலிருந்து சொன்னாங்க.''

""எனக்கும் அப்படித்தான் தகவல் வந்ததுங்க தலைவரே.. அதே நேரத்தில் நரேந்திர மோடியை பா.ஜ.க முன்னிறுத்துவது சென்னையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்குது. முக்கியமா, ஜெ ரொம்பக் குழம்பிப் போயிருக்காராம்.''



""அவர்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகளை முன்கூட்டியே ஆரம்பிச்சிட்டாரே. அ.தி.மு.க நிர்வாகிகளும் ஜெ.தான் பிரதமர்னு மேடைக்கு மேடை சொல்லிக்கிட்டிருக்காங்களே.. அப்புறம் ஏன் குழப்பம்?''

""ஜெ.வைப் பொறுத்தவரை, 2014 எம்.பி. தேர்தலையும் 2016 சட்டமன்றத் தேர்தலையும் தன்னோட அரசியலின் வாழ்வா சாவா பிரச்சினையா நினைக்கிறாரு. சீட்டாட்டத்தில் ரம்மி சேர்க்குறப்ப சில கார்டுகளை எடுத்துக்குவாங்க, சில கார்டுகளை இறக்கிடுவாங்க. அதுபோல அ.தி.மு.க தன்னோட கூட்டணியில் எந்தக் கட்சிகளை சேர்க்குறது, எந்தக் கட்சிகளை கழட்டி விடுறதுன்னு யோசிக்குது. இப்போதைக்கு அ.தி.மு.க அணியில் ஸ்ட்ராங்கா இருப்பது இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும்தான். அதேநேரத்தில், மோடியை பிரதமர் வேட்பாளரா பா.ஜ.க முன்னிறுத்தினா தமிழ்நாட்டிலும் அவருக்கு ஆதரவு அதிகரிக்கும்னும், அ.தி.மு.க ஆதரவு வாக்குகளில் சுமார் 6% அளவுக்கு மோடி சைடுக்குப் போகும்னும் ஒரு  ரிப்போர்ட் ஜெ. கைக்குப் போயிருக்குதாம். அதனால்தான் குழப்பம்.''

""குழப்பத்துக்கான  தெளிவு?''

""கார்டனில் பலவிதமா யோசனைகள் நடக்குதாம். பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்து அவங்களுக்கு குறைச்சலான சீட் கொடுத்துவிட்டு, 35 தொகுதிகள் அளவிற்குப் போட்டியிட்டு ஜெயித்தால், சென்ட்ரலில் பவர்ஃபுல்லா இருக்கலாம்ங்கிறது ஒரு கணக்கு. ஜெ.வைப் பொறுத்தவரை கூட்டணிங்கிறது தேர்தல் வரைக்கும்தான். ரிசல்ட் வந்த மறுநொடியே கூட்டணி இல்லைன்னு சொல்வது வழக்கம். மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்து, தனக்கு நல்ல  செல்வாக்கு இருந்தால் அந்த ஆட்சியை ஆட்டிவைக்கும் சக்தியாக விளங்குவது, இல்லைன்னா தன்னிடமுள்ள எம்.பிக்கள் மூலமா மூன்றாவது அணியை அமைத்து தன்னுடைய பிரதமர் ஆசையை நிறைவேற்றிக்கொள்வதுங்கிறது இன்னொரு கணக்கு. 1998ஆம்  ஆண்டு நடந்த எம்.பி.  தேர்தலில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., ம.தி.மு.க. எல்லாம் ஒரே கூட்டணியா நின்று 30 சீட்டுகளை ஜெயிச்ச மாதிரி, இப்பவும் ஒரு கூட்டணி அமைக்கலாம்ங்கிறது மூன்றாவது கணக்கு. இப்ப பா.ஜ.க. பக்கம் போனால் 2016 சட்டமன்றத் தேர்தலில் தனக்கு வலுவான கூட்டணிக் கிடைக்குமான்னும் ஜெ.வுக்கு யோசனை இருக்குது. இந்த கணக்குகளும் யோசனைகளும்தான் அவரைக் குழப்பிக்கிட்டி ருக்குதாம். எந்த வழியைத் தேர்ந்தெடுப்பதுன்னு தீவிரமா ஆலோசனைகள் நடந்துக்கிட்டிருக்குது.''

""தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த்தும் குழப்பத்தில்தான் இருக்காரு போல…. தே.மு.தி.க.வின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழாவை நிர்வாகிகள் சொந்த செலவில், மக்கள் நலத் திட்டங்களோடு நடத்தணும்னு அறிக்கை விட்டிருக்கும் அவர், கட்சி ஆரம்பிப்பது எளிது, அதைத் தொடர்ந்து நடத்துவதுதான் கஷ்டம்னும் சொல்லியிருக்காரே?''

""விஜயகாந்த் இன்னொரு விஷயத்தையும் கோடிட்டுக் காட்டியிருக்காரு. பொய் வழக்குகளை எதிர்கொண்டு வரணும்னு சொல்லியிருக்காரு. அதற்கு காரணம், அவருக்கு கிடைச்சிருக்கிற ஒரு தகவல்தானாம். விஜயகாந்த், பிரேமலதான்னு ஆரம்பிச்சி கேப்டன் டி.வி.யில் நியூஸ் வாசிக்கிறவங்க வரைக்கும் அவதூறு வழக்குகளில் சிக்கிக்கிட்டிருக்காங்க. அதற்காக அவர் ஊர்ஊரா அலைஞ்சிக்கிட்டிருக்கிற நிலையில், புதுசா நில அபகரிப்பு வழக்குப் போட ஒரு ப்ளான் ரெடியாகியிருக்குதாம்.''

""நில அபகரிப்பா?''

""ஆமாங்க தலைவரே.. தே.மு.தி.க.வில் பொருளாளரா இருந்து, மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏவுமான சுந்தர்ராஜன் இப்ப அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏவா தாவிட்டாரு. விஜயகாந்த் சினிமாவில் நடிக்க வர்றதுக்கு முன்னாடி மதுரையில் விஜய்ராஜா இருந்தப்ப, சென்ட்ரல் சினிமா தியேட்டர் பக்கத்திலே உள்ள வளையக்காரத் தெருவுலதான் அவருக்கு வீடு. அதே தெருவுலதான் சுந்தர்ராஜனும் கடை வச்சிருந்தாரு. அப்போதிருந்தே இருவருக்கும் நல்ல நட்பு. சினிமா, அரசியல்னு விஜயகாந்த் வளர்ந்தப்ப சுந்தர்ராஜனும் கூட இருந்தாரு. சினிமாவில் விஜயகாந்த் சம்பாதிச்ச பணத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 ஏக்கர் நிலத்தை வாங்குனப்ப அதை சுந்தர்ராஜன் பெயரிலேதான் பதிவு செஞ்சாராம். கட்சி ஆரம்பிச்சப்ப, சுந்தர்ராஜனை பொருளாளராக்குனாரு. ஆனா, அதற்கப்புறம் தன்னை ஒதுக்குவதா சுந்தர்ராஜன் நினைச் சாரு.''

""அவரை  யார் ஒதுக்குனாங் களாம்?''


""விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் இவங்கமேலதான் சுந்தர்ராஜன் குற்றச்சாட்டு சொன்னாரு. விஜய காந்த்தும் அவங்க பேச்சைத்தான் கேட்குறாருன்னும், வீட்டோட மாப்பிள்ளையா ஆயிட்டமாதிரி நடந்துக்கிறாருன்னும் தனக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகள் சிலர்கிட்டே சுந்தர்ராஜன் பேச, அதிலே ஒருத்தர் அதை ரெகார்டு பண்ணி விஜயகாந்த் குடும்பத்தின் கவனத்துக்குக் கொண்டு போயிட்டாரு. இதையடுத்து, சுந்தர்ராஜனை கூப்பிட்டு சத்தம் போட்டதோடு, அவர் பேரிலிருந்த நிலத்தை மாற்றி, சேலம் இளங் கோவன் பேருல பதிவு செஞ்சிட் டாங்க. இப்ப அந்த இளங் கோவன்தான் தே.மு.தி.கவோட பொருளாளர். பழைய பொரு ளாளரான சுந்தர்ராஜன் இப்ப எந்த வசதியும் இல்லாம இருக்காராம். ஆளுந்தரப்புக்கு ஆதரவா இருப்பதால, போலீஸ் அதிகாரிங்க அவர்கிட்டே, நீங்க ஒரு கம்ப ளைண்ட் கொடுங்க. விஜயகாந்த் தையும் அவரோட குடும்பத் தாரையும் நில அபகரிப்பு வழக்கில் சிக்க வச்சிடுறோம்னு சொல்லி யிருக்காங்களாம். இந்தத் தக வல்தான் விஜயகாந்த் காதுக்கு வந்திருக்குது.''

""அவர் எப்படி இதை எதிர்கொள்ளப் போறாராம்?''

""புகார் கொடுத்தால் கொடுக் கட்டும்னு சொல்லும் விஜயகாந்த், ஒரு நிலம் ஒருத்தர் பெயரிலிருந்து இன்னொருத்தர் பெயருக்கு சட்டரீதியா மாற்றப்பட்டிருக்குது. இதில் யாரையும் மிரட்டலை. என் மீதும் என் மனைவி, மச்சான் மீதும் புகார் கொடுத்து நடவடிக்கை எடுத்தால் அந்த பொய் வழக்கையும் எதிர்கொள்ள ரெடியா இருக்கேன்னு சொல்றாராம்.'' 

""வேற தகவல்?''

""அ.தி.மு.கவின் நிர்வாக மட்டத்திலிருந்து கிடைச்ச தகவல்களைச் சொல்றேங்க தலைவரே.. .. மாணவரணி செயலாளர் பதவியிலிருந்து சரவண பெருமாள் நீக்கப்பட்டதிலிருந்து 4 மாதமா அந்த இடம் காலியா இருக் குது. அதுபோல இளைஞர்கள்- இளம் பெண்கள் பாசறைச் செயலாளரா இருந்த வைகைச்செல்வன் சமீபத்தில் நீக்கப்பட்டதால் அந்த இடமும் காலியா இருக்குது. இதைக் குறிவைத்து எம்.எல்.ஏக்கள், முன்னாள் மந்திரிகள், எம்.பி. தேர்தலில் போட்டிபோட விரும்புறவங்க எல்லோரும் காய் நகர்த்துறாங்க. இந்தப் போஸ்டிங்கைப் பிடிச்சிட்டா அடுத்தகட்ட வளர்ச்சி ஈஸியா இருக்கும்னு நினைக்கிறாங்க. மாஜிமந்திரி செந்தமிழன், பாசறை இணைச்செயலாளர் ராஜலட்சுமி, புதுக்கோட்டை மா.செ. விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் ஓ.பி.எஸ்ஸை பார்த்து தங்களுக்கு இந்த போஸ் டிங்கை சிபாரிசு செய்யும்படி பயோ டேட்டாவைக் கொடுத்து ஜெ.கிட்டே சேர்க்கச் சொல்லிக் கிட்டிருக்காங்க. வரும் பயோடேட்டாவையெல்லாம் வாங்கி மட்டும் வச்சிக்கிறாராம் ஓ.பி.எஸ்.''

""ஏன்?''

""தன்னோட மகன் ரவீந்திரநாத் தேனி மாவட்ட பாசறை செயலாளரா இருக்காரு. வைகைச்செல்வன் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாசறை கூட்டம் போட்டப்ப ஒருங்கிணைப் பாளரா ரவீந்திரநாத்தையும் புதுக்கோட்டை மாவட்ட பாசறை செயலாளர் ராஜகோபாலையும்தான் போட்டார். அவங்க பேரும் விளம்பரங்களில் இருந்தது. அதனால தன் பையனை பாசறை செயலாளராகவோ மாணவரணி செயலாளராகவோ ஆக்கிட்டா, எம்.பி. தேர்தலில் சீட் வாங்குவதும் ஈஸியா இருக் கும்னு கணக்குப்போட்டுத்தான் தன்கிட்டே வந்த பயோ டேட்டா எதையும் ஜெ.வோட கவனத்துக்குக் கொண்டு போகலை. அதேநேரத்தில், தனக்கே இப்ப நேரம் சரியில்லைங் கிறதால சமயம் பார்த்து மகன் விஷயத்தை ஜெ. காதுக்குக் கொண்டு போகலாம்னு வெயிட் பண்ணிக்கிட்டிருக்காராம். தேனியில அப்படின்னா, கரூரில் வேறொரு கணக்கு.''

""என்ன கணக்கு?''

""கரூர் எம்.பி. தம்பிதுரை மறுபடியும் களமிறங்கினால் மா.செ.வும் மந்திரியுமான செந்தில்பாலாஜி, அவரோட தம்பி மற்றும் உறவினர்களுக்குத் தொகுதியில் இருக்கும் கெட்ட பேரு தன்னுடைய வெற்றியைப் பாதிக்கும்னு நினைக்கிறாரு. அதனால தேர்தலுக்கு முன்னாடி மா.செ.வை மாற்றியாகணும்னு காய் நகர்த்துறாரு. செந்தில்பாலாஜியோ ஜெ.கிட்டே செல்வாக்கா இருக்காரு. தேர்தலுக்கு முன்னாடி மாநகராட்சிகளாக்கப்படும் நகராட்சிகள் லிஸ்ட்டில் கரூரும் இருக்குது. அப்படி ஆகிவிட்டால், மாநகர செயலாளரா ஒருவர் நியமிக்கப்படுவார். அவராவது தனக்குத் தோதானவராக இருந்தால் ஓட்டுகளை வாங்க முடியும்ங்கிறதுதான் தம்பிதுரையோட கணக்கு.''

""என்னென்னவோ கணக்குகள் போடப்படுது..''

""ஆமாங்க தலைவரே.. சென்னை  ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் முதுகுத்தண்டு ஆபரேஷன் நிபுணரான டாக்டர் சுப்பையா ரிடையர்டாயிட்டாரு.  சீனியாரிட்டிப்படி அந்த இடத்துக்கு வரவேண்டியவர் டாக்டர்  பசுபதி. அவருக் கான ஆர்டரும் வந்திடிச்சி. ஆனா, திடீர்னு அந்த ஆர்டரை நிறுத் திட்டு, டாக்டர் கருணா கரன்ங்கிறவரை நியமிக்கும் படி பிரஷராம். இவர் ரொம்ப ரொம்ப ஜூனி யர்னு ஜி.ஹெச் டாக்டர் கள் சொல்றாங்க. தனியார் நிறுவனங்களான அண் ணாமலை பல்கலைக்கழகத் திலும் ராமச்சந்திரா  மெடிக்கல் காலேஜிலும் படிச்சிட்டு அரசு டாக்டராகியிருக்காரு  கருணாகரன். ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் அரசு டாக்டர்கள் முதலில் வேலை பார்ப்பாங்க. ஆனா, இவர் நேரடியா ஜி.ஹெச்சில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டாரு. எல்லாவற்றிலும் பலத்த சிபாரிசு, குறுக்கு வழின்னு வந்தவருக்கு சீனியாரிட்டியை மீறி ஜி.ஹெச்சில் போஸ்டிங் போட ணும்னு கொடுக் கப்படும் நெருக் கடியை மருத்துவக் கல்வி இயக்குநர் வம்சதாராவும் ஒத்துக்கலை, சுகாதாரத்துறைச் செயலாளரான ராதாகிருஷ்ணனும் அப்படி கொடுக்க முடியாதுன்னு ஃபைலில் எழுதிட் டாங்க. ஆனாலும்  மேலிடத்து உத்த ரவு என்று அமைச் சர் வீரமணி நெருக்கடி தருகிறா ராம். முறையா இந்த இடத்தை அடைய வேண் டிய டாக்டர் பசு பதி, கோர்ட்டுக் குப் போகணும்னு நினைச்சப்ப அவ ருக்கும் உருட்டல் மிரட்டல்னு வந்தி ருக்குது. கருணா கரனுக்கு போஸ்டிங் போடு வதற்கான ஃபைல்கள்  வேகவேகமா மூவ் ஆகிக்கிட்டிருக்குது.''

""ஏழை மக்கள் தங்கள் உயிரை ஒப்படைக்கிற இடம்தான் அரசு மருத்துவமனை. அதிலும் போஸ்டிங் முறைகேடுகளா? புகழ்மிக்க சென்னை ஜி.ஹெச்சிலேயே இந்த நிலைமையா?''

""ஏழைகள் உயிருக்கு ஏது மதிப்பு? டெல்லி யிலிருந்து கிடைச்ச ஒரு தகவலோடு நான் லைனில் இருக்கேன். பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து எப்படி மீள்வதுங்கிற தீவிர சிந்தனை யில் இருக்கும் ஜெ., டெல்லியில் உள்ள சீனியர் வக்கீல்களை அவரே தொடர்புகொண்டு ஆலோ சனைகள்  கேட்கிறாராம். அப்படி கிடைத்த ஆலோசனைப்படிதான், பவானிசிங்கே அரசு வக்கீலா இருந்து வழக்கை நடத்தணும்னு ஸ்பெஷல் கோர்ட்டில் திடீர்னு மனுபோடப் பட்டது. ஆனா, அதுவும் தள்ளுபடியாயிடிச்சி. அதனால அடுத்தகட்டமா என்ன செய்ய லாம்னு தீவிர ஆலோசனைகளை கேட்டு வருகிறாராம் ஜெ.''

 லாஸ்ட் புல்லட்!

கடந்த சட்டமன்றத்  தேர்தலின்போது இணையதளத்தில் நடந்த தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிக்கொண் டிருந்த தி.மு.க. இப்போது இணையதளத்தில் புதுப்பாய்ச்சலுடன் செயல்பட்டு வருகிறது. அதனைக் கூர்மைப்படுத்தும்விதத்தில் புதுக்கோட்டை மா.செ பெரியண்ணன் அரசு ஏற்பாடு செய்த இணைய பயிற்சி முகாமில் 400-க்கும் மேற்பட்ட தி.மு.க. இணைய செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். இணையதளத்தில் நீண்டகாலமா இயங்கி வரும் எம்.எம்.அப்துல்லா, கீரை தமிழ்ராஜா உள்ளிட்டோரும் சுப.வீ. போன்றவர்களும் பயிற்சி முறைகளை அளித்தனர். தி.மு.க.வைப் போலவே ம.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் இணையதளப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. 

பி.ஆர்.பி குடும்பத்தினர் தங்கள் ஃபேக்டரிக்குள் பல்லாயிரம் கோடி, பணம் நகைகளை புதைத்து வைத்திருப்பதாக மதுரை போலீஸ் எஸ்.பி.க்கு வந்த புகாரையடுத்து இரவு-பகலாக மஃப்டி போலீசார் பி.ஆர்.பி. ஃபேக்டரியை கண்காணிக்கின்றனர். பி.ஆர்.பி.யின் மகன்களில் ஒருவர் கடந்த வாரத்தில் வாட்ச்மேன் உடையில் ஃபேக்டரிக்குள் போய் வந்ததையும் செல்போனில் படம் பிடித்துள்ளதாம் இந்த மஃப்டி போலீஸ் டீம். 

அ.தி.மு.க அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரின்  சிபாரிசினால் அரசுப் பள்ளிகளில் முறைகேடான வகையில் வாட்ச்மேன் வேலை நியமனம் நடைபெற்றது தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கில், பள்ளிக்கல்வித்துறைச் செயலாளரைக் கொண்டு விசாரணை நடத்துவதாக அரசு கூடுதல் அட்வகேட்  ஜெனரல் கோர்ட்டில்  தெரிவித்தார். அதைக் கேட்ட நீதிபதி, இந்த அதிகாரிகள் உத்தரவின்பேரில்தான் மந்திரிகளின் சிபாரிசு ஏற்கப்பட்டிருக்கிறது. அதனால் அவர்கள் விசாரிக்க முடியாது, வேறு அதிகாரிகளின் பெயர்களைக்  கொடுங்கள் என உத்தரவிட்டார்.

வேலூரில் நடைபெறுவதாக இருந்த தி.மு.க.வின் முப்பெரும்விழா, சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. கடும் மழை ஒரு காரணம் என்றாலும் கூடுதல் காரணமும் உண்டு. அண்மையில் வேலூர் மா.செ. காந்தி இல்லத் திருமணத்திற்கு கலைஞர் சென்றபோது ஏற்பாடுகள் சரிவர செய்யப்படவில்லை. குடும்ப நிகழ்ச்சியிலேயே இப்படி என்றால் கட்சி நிகழ்ச்சி எந்தளவுக்கு இருக்கும் என்ற கலைஞரின் கோபமே இடமாற்றத்திற்கான இன்னொரு முக்கிய காரணமாம்.

ad

ad