புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2013

லண்டன் நகரின் அமைந்துள்ள கடையொன்றில் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இலங்கைத் தமிழர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
லிவர்பூல் பிரதேசத்தின் லித்தர்லேண்ட் என்ற பகுதியில் அமைந்துள்ள கடையொன்றுக்குள் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள், கடை ஊழியரான மில்டன் தர்மலிங்கம் என்ற தமிழர் மீதே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தமிழரான கனகசபை சிறிதரன் என்பவருக்கு சொந்தமான கடைக்குள் இரண்டு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் பாரிய இரும்பு சங்கிலியுடன் புகுந்துள்ளனர்.
கடைக்குள் புகுந்த கொள்ளையர்களைத் தடுத்த மில்டனை பாரிய இரும்பு சங்கிலியால் தாக்கியுள்ளனர். இதனால் அவரது முகத்திலும் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கடைக்குள் புகுந்த கொள்ளையர்களை தடுக்க அவர்களுடன் ஆயுதங்கள் இன்றி மில்டன் தர்மலிங்கம் சண்டையிட்டுள்ளார்.
கடையில் இருந்த பாதுகாப்பு கெமராக்களில் அவர் கொள்ளையர்களுடன் சண்டையிடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இத்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த தர்மலிங்கம், கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரது தலையில்10 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad