புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 செப்., 2013


நூதனமான முறையில் காசைக் கறக்க ஒரு புதுவிளையாட்டு ஒன்று லண்டனில் ஆரம்பமாகியுள்ளது. ஒரு மோபைல் நபம்பரில் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும். சுமார் 2 தரம் மட்டுமே அழைப்புவிடுக்கப்படும். நீங்கள் ஆன்சர் பண்ண முன்னரே அது கட் ஆகிவிடும்
( அதாவது மிஸ்ட் கால்). நீங்கள் உடனே என்ன செய்வீர்கள் , மோபைல் நம்பர் தானே என்று அந்த நம்பருக்கு திருப்பி அழைப்பீர்கள். சாதாரன மோபைல் நம்பர்(இலக்கம்) எப்படி இருக்குமோ அதேபோலத்தான் அந்த நம்பரும் இருக்கும். ஆனால் அது பிரீமியம் நம்பர். (அதாவது அந்த தொலைபேசிக்கு அழைத்தால் நிமிசத்திற்கு 1.50 பவுண்டுகள் வெட்டு) 1.50 பவுண்டுகள் காசு கட்டவேண்டி இருக்கும். அதுவும் உங்களுக்கு உடனே தெரியாது. மாதம் முடிவில் நீங்கள் அந்த நம்பருக்கு எத்தனை தரம் அடித்தீர்கள் அதற்கான காசு, பின்னர் VAT என்னாம் போட்டு உங்கள் மோபைல் போன் வழங்குனர் பில் அனுப்புவார்கள்.

சாதாரணமாக அப்ப தான் நாம் ஓடி முழிப்போம் , அட இது அன்று வந்த மிஸ் கால் என்று. 07978220256 அல்லது கடைசி இலக்கம் 7 ல் முடியும் இந்த நம்பருக்கு உங்கள் வீட்டு தொலைபேசி என்றாலும் சரி, உங்கள் மோபைல் போனில் இருந்து அடித்தாலும் சரி காசு வெட்டும். சிலவேளைகளில் நீங்கள் வோடா போன் கஸ்டமராக இருந்தால், நீங்கள் இந்த நம்பருக்கு அழைக்கும்போது முதலில் ஒரு எச்சரிக்கை அறிக்கை வாசிக்கப்படும். ஆனால் பல மோபைல் நிறுவனங்கள் இதுபோன்று தமது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிக்கை விடுவதே இல்லை. எனவே லண்டன் வாழ் தமிழர்கள் இதுதொடர்பாக ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இந்த காசு பறிக்கும் வேலை தொடர்பாக அதிர்வு இணையம் லண்டனில் உள்ள Trading Standards Institute
நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது என்பதனையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

ad

ad