புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2013

"ஆளும் ஐ.ம.சு. முன்னணியின் சார்பில் இராணுவம் நிறுத்திய 4 வேட்பாளர்'
வடமாகாண சபைத்தேர்தலில் யாழ்.குடாநாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தவிர, இராணுவத்தினரின் சிபார்சின் பேரில் இன்னும் நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுவதை மக்கள் இனம் கண்டுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இது சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
வடமாகாண சபைத்தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் சிபார்சின் பேரில் நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து போட்டியிடும் வேட்பாளர்களைத் தவிர மேலதிகமாக நான்கு உறுப்பினர்கள் தமது சுவரொட்டிகளை யாழ்.குடாநாட்டில் ஒட்டி வருகிறார்கள். இவ்வாறான சுவரொட்டிகளை இராணுவத்தினர் ஒட்டுவதாகவும் இவ்வாறு சுவரொட்டிகளை ஒட்டும்போது மக்கள் வந்தால் அவ்விடத்தைவிட்டு ஓடிவிடுவதாகவும் அங்குள்ள மக்கள் எமக்கு கூறினார்கள்.
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரே அரசியல் ரீதியான, அச்சுறுத்தக்கூடிய வகையிலான அறிக்கைகளை மக்கள் மத்தியில் விநியோகிக்கிறார்கள். அதேபோன்று இராணுவத்தின் உளவுத்துறையினர் மக்களையும் எமது வேட்பாளர்களையும் அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவ்வாறான சம்பவங்களுடன், இராணுவத்தினர் 4 உறுப்பினர்களை நிறுத்தியுள்ளதாகவும் அவர்களின் பின்னணியில்தான் மேற்கூறப்பட்ட சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் இராணுவத்தினர் இந்த நான்கு உறுப்பினர்களையும் வெற்றிபெறச் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அறியக்கூடியதாக இருக்கிறது. இது தொடர்பில் நாம் மிகவும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மக்கள் இவ்வாறானவர்களை முழுமையாக இனம் காண்பார்கள் என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
-

ad

ad