புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2013

மோடியை பிரதமராக எங்கள் கட்சி ஏற்றுக்கொள்ளாது: திருமாவளவன்

புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள ஆதிங்கம்பட்டு கிராமத்தில் அம்பேத்கர் முழுஉருவ வெண்கலசிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழா மற்றும் விடுதலைசிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு
செயலாளர் பாவாணின் 50–வது பிறந்தநாள் பொன்விழா நேற்று நடைபெற்றது.


விழாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பாவாணன் தலைமை தாங்கி னார்.   விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அம்பேத்கார் சிலையை திறந்து வைத்தார். பின்னர் பாவாணன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசினார்.


அவர் பேசியபோது,  ‘’உலக அளவில் அம்பேத்காருக்கு அதிக அளவில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அம்பேத்கார் மீது கொண்ட மரியாதை காரணமாக பொதுமக்களால் அதிக அளவில் சிலை வைக்கப்படுகிறது. அம்பேத்காரின் தத்துவத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்றால் அனைத்து நாடுகளிலும் பிரச்சினை ஏற்படாமல் சுமூகமான நிலை நிலவ வழிவகுக்கும்.
விழாவில் எனக்கு முன்பு பேசிய முன்னாள் அமைச்சர் கந்தசாமி ஒரு கருத்தை வலியுறுத்தினார். அவர் பேசும் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி, வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீயஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளக்கூடாது. காங்கிரஸ் கட்சியுடன் தான் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எங்கள் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் முரண்பாடுகள் நிறைய உள்ளன. இருந்த போதிலும் எங்கள் கட்சி ஒரு போதும் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாது. அதேபோல் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான நரேந்திரமோடியை பிரதமராகவும் எங்கள் கட்சி ஏற்றுக்கொள்ளாது.
புதுச்சேரி மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, அவர்களின் நலனுக்காகவே பயன்படுத்த வேண்டும் எனகேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு நிதியை முறையாக பயன்படுத்தும் கட்சிக்கு விடுதலைசிறுத்தைகள் உறுதுணையாக இருக்கும்’’என்று தெரிவித்தார்.

ad

ad