புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2013

யாழ். மாவட்ட விருப்பு வாக்குகள்! சீ.வி.விக்னேஸ்வரன் முதலிடம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரான ஓய்வுபெற்ற நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் 132,255 அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.யாழ். மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பாக
சீ.வி.விக்னேஸ்வரன் 132,255 அதிகூடிய விருப்பு வாக்குகளையும்,
அனந்தி சசிதரன் 87,870 விருப்பு வாக்குகளையும்,
தர்மலிங்கம் சித்தார்த்தன் 39,715 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மேலும், பாலச்சந்திரன் கஜதீபன் 29,669 விருப்பு வாக்குகளையும்,
இ.ஆர்னோல்ட் 26,888 விருப்பு வாக்குகளையும்,
கந்தையா சிவஞானம் 26,747 விருப்பு வாக்குகளையும்,
எம்.கே.சிவாஜிலிங்கம் 22,660 விருப்பு வாக்குகளையும்,
ஐங்கரநேசன் பொன்னுத்துரை 22,268 விருப்பு வாக்குகளையும்,
எஸ்.சுகிர்தன் 20,541 விருப்பு வாக்குகளையும்,
கே.சயந்தன் 20,179 விருப்பு வாக்குகளையும்,
விந்தன் கனகரத்தினம் 16,463 விருப்பு வாக்குகளையும்,
ஏ.பரம்சோதி 16,359 விருப்பு வாக்குகளையும்,
கந்தையா சர்வேஸ்வரன் 14,761 விருப்பு வாக்குகளையும்,
வி.சிவநேசன் 13,479 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இதேவேளை, ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்
கமலலேந்திரன் 13,632 விருப்பு வாக்குகளையும்,
அங்கஜன் இராமநாதன் 10,034 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ad

ad