புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2013

ஐநாவில் மன்மோகன்சிங் ஆற்றிய உரை
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், இன்று ஐக்கிய நாடுகள் பொதுசபையில் உரையாற்றினார். அவரது உரையில் முக்கிய அம்சங்கள் :



ஒருங்கிணைந்த வளர்ச்சியே அனைத்து நாடுகளுக்கும் அவசியம். ஏழ்மையை ஒழிக்க புதிய கொள்கை திட்டத்தை உலக நாடுகள் வகுக்க வேண்டும். ஆப்பிரிக்க நாடுகளின் ஏழ்மையைப் போக்குவதில் வளர்ந்த நாடுகளுக்கு பங்கு உள்ளது.
ஆப்பிரிக்காவுக்கு இந்தியா 9.5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சலுகை உதவி அளித்துள்ளது. வளரும் நாடுகளுடன் இந்தியா கூட்டுறவு வைத்துள்ளது பெருமை அளிக்கிறது. பெண்கள் முழுமையான ஊட்டச் சத்து பெறுவதை உறுதி செய்வது அவசியம்.
எல்லா இடங்களிலும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பாகிஸ்தான் மண்ணில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை ஒழிக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை சகித்துக் கொள்ள முடியாது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி என்பதில் ஒருபோதும் சமரசம் கிடையாது. சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில் காஷ்மீர் விவ காரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயார். மேலும் பாகிஸ்தானுடனான அனைத்து விவகாரங் களும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நாளை சந்தித்து பேசுவதை எதிர்நோக்கியிருக்கிறோம். ஒரு புதிய தொடக்கத்திற்கு நவாஸ் ஷெரீப் முன்வந்துள்ளார்.

ad

ad