புதன், செப்டம்பர் 11, 2013

வீதியில் தனியாக சென்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரின் மார்பகத்தை தடவி விட்டு தப்பிச் சென்ற நபரொருவரை பாணந்துறை பொலிஸார் தேடிவருகின்றனர்.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 18 வயதான குறித்த யுவதி பாணந்துறை ஸ்ரீ மஹா விகாரை வீதியில் உள்ள வீடொன்றில் வசித்து
வருபவரெனவும் அவர் தனியே தான் வசிக்கும் வீட்டுக்குச் செல்லும் வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தன்னிடம் தவறாக நடந்துகொண்ட நபருக்கு சுமார் 25 வயதிருக்குமெனவும்  அவரை மீண்டும் கண்டால் தன்னால் அடையாளம் காட்டமுடியுமெனவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.