புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2013

தீவக பகுதிகளில் இரவு நேரங்களில் வன்முறைக் கும்பல் தொடர் அட்டகாசம்!
தமிழ்க் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களை அச்சுறுத்தும் வகையில் தீவகப் பகுதிகளில் இரவு நேரங்களில் வன்முறைக் கும்பல்கள் செயற்பட்டு வருவதால் பல பகுதிகளில் இயல்பு நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இல்லாதவாறு அண்மையில் நடைபெற்று முடிந்த வட மாகாண சபைத் தேர்தலில் தீவகப் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. ஊர்காவற்துறை தொகுதியையும் தமிழ்க் கூட்டமைப்பு கைப்பற்றியது.
இந்நிலையில் தமிழ்க் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களையும் கூட்டமைப்பு ஆதரவாளர்களையும் பழிவாங்கும் படலம் இப்பிரதேசத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
குறிப்பாக தமிழ்க் கூட்டமைப்புக்கு அதிக வாக்கு கிடைத்த ஊர்காவற்துறை, தம்பாட்டி, புளியங்கூடல், நாரந்தனை தெற்கு, நெரிஞ்சிமுனை பகுதிகளில் வன்முறைக் கும்பங்களில் திட்டமிட்ட அச்சுறுத்தும் வகையிலான அராஜகங்கள் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தமிழ்க் கூட்டமைப்பினர் பதவியேற்காத நிலையில் பாதுகாப்பின்றி இந்தப் பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்துப் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்க் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களை உளவியல் ரீதியாக அச்சுறுத்தி அவர்களை மீண்டும் தமது பக்கம் திருப்பும் முயற்சியாகவே இந்தச் செயற்பாட்டை நோக்கவேண்டியுள்ளதாக தமிழ்க் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.
இரவில் பிக்கப் வாகனங்;களில் இந்தப் பகுதிகளுக்குச் சென்று அச்றுறுத்தும் குழுவினரை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். வாகனத்தில் பொல்லுகள், தடிகள் உள்ளிட்டவை காணப்படுகின்றன. மதுப் போத்தல்களும் உள்ளன என பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இரவில் வீதியால் செல்லும்போது மறிக்கும் வன்முறைக் கும்பல் எம்மிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் எனக் கேட்டு மிரட்டுகின்றனர். இரவில் சுதந்திரமாக நடமாடமுடியாத வகையில் நாம் முடக்கப்பட்டுள்ளோம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
கடற்றொழிலாளர்களை அதிகமாக கொண்;ட இப்பிரதேசங்களில் இரவு வேளைகளில் தனியாக தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அச்சுறுத்தல் காரணமாக நாங்கள் ஒன்றுசேர்ந்து கூட்டமாகவே செல்கிறோம் என்கின்றனர் தம்பாட்டி கடற்றொழிலாளர்கள்.
சனிக்கிழமை இரவு 10 மணிவரை தம்பாட்டி இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கால்பந்து போட்டியொன்று அச்சுறுத்தல் காரணமாக சனிக்கிழமை இரவு 9 மணியுடன் ேநிறுத்தபப்பட்டது.
தேர்தல் தினத்தன்று கூட வாக்களிக்க செல்ல முடியாதவாறு தாங்கள் அச்சுறுத்தப்பட்டதாக கூறும் தம்பாட்டி பிரதேச தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவாளர்கள், இறுதியில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் உதவியுடனேயே தாம் வாக்களிக்கச் சென்றதாகவும் தெரிவிக்கின்றனர்.
நாம் ஒரு கிராம மக்கள் அரசியல் பிரிவினைகளை இருந்தபோதும் ஒற்றுமையாக இருந்தோம். ஆனால் எம்மை பிரித்தாள இப்போது சூழ்ச்சி இடம்பெறுகிறது. ஆனாலும் நாங்கள் ஒற்றுமையுடனேயே இருப்போம்.
உண்மையில் அடையாளம் காணப்பட்ட வன்முறைக் கும்பலின் ஆதரவாளர்கள் கூட இக்கும்ல் மதுபோதையில் ஆயுதங்களுடன் வரும்போது எமக்கு தகவல் வழங்கி எம்மை வெளியேறவிடாது பாதுகாக்கின்ற்னர் எனவும் தம்பாட்டி தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ad

ad