புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2013

முஸ்லிம்களும் ஏற்கக்கூடிய சமஸ்டியே வேண்டும் தீர்வாக; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பு 
முஸ்லிம் மக்களும் ஏற்கக் கூடிய சமஷ்டித் தீர்வே தமிழர்களுக்குத் தேவை என்று நேற்று வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 
"தமிழ் பேசும் முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமஷ்டிக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் என்ற ஓர் அலகின் கீழ் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்'' என்று அந்த விஞ்ஞாபனம் கூறுகின்றது.
 
வடக்கு மாகாண சபைத் தேர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்தார். முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் அதனைப் பெற்றுக்கொண்டார்.
 
அதில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை நிறைவு செய்வதற்கான முதற்படியாக வடமாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்கிறது.
 
30 வருடப் பகைமையும் போரும் தமிழ் பேசும் வடக்கு கிழக்குப் பகுதியைப் பேரழிவுக்கு உள்ளாக்கியதோடு தமிழ் மக்களையும் கதியற்ற வர்களாக்கியது. போரால் 10 லட்சம் மக்கள் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடினர். 5 லட்சம் மக்கள் நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தனர்.
 
ஒரு லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் மோதல் நிலவிய ஆண்டுகளில் கொல்லப் பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடற்றவர்களானார்கள். 
 
இறுதிக் கட்டத்தில் இராணுவத் தின் தாக்குதலால் 70 ஆயி ரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு முக்கியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுவது இறையாண்மையின் மூலம் ஆட்சி அதிகாரங்களைப் பகிர்வதனையே ஆகும். 
 
உண்மையான நல்லிணக்கத்தையும் நீடித்திருக்கக்கூடிய சமாதானத்தையும் எட்ட பின் வரும் அம்சங்கள் முக்கியமானவை. மீதமிழர்கள் தனிச் சிறப்பு மிக்க தேசிய இனம். 
மீவடக்குகிழக்கு தமிழர்களின் வரலாற்று ரீதியான வாழ்விடம். மீதமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். 
 
அதிகாரப் பகிர்வானது காணி, சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், கல்வி ஆகியன உள்ளிட்ட சமூக பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்கள் ஆகியவற்றின் மீதானவையாக இருக்க வேண்டும்.
 
மீதமிழர்கள் ஒரு தேசிய இன மக்கள் குழாம் என்ற வகையில் நாம் இந்த நாட்டில் பேரினவாத விரிவாக்கத்திற்கு ஆட்படாது, கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் சமத்துவமான மக்களாக ஏனையோருடன் சேர்ந்து சமாதான சகவாழ்வு வாழவே விரும்புகின்றோம்.
 
வடக்கு கிழக்கில் தன்னாட்சி அரசை உறுதி செய்வதற்காக நாம் செய்யக்கூடியது என்ன என்பதைத் தீர்மானிப்பதற்கான எமது தெரிவைப் பயன்படுத்துவதற்கான எமது உரிமை குறித்து நாம் கரிசனைப்படுகிறோம்.
 
இறைமை மக்களிடமே உண்டு; அரசிடம் இல்லை. தமிழ் மக்களை ஆளும் உரிமை கொழும்பு அரசிடம் இல்லை. அந்த மக்களிடமே உண்டு. மத்திய அரசிடமும் ஆளுநரிடமும் அதிகாரங்கள் குவிந்திருப்பதால் அரசமைப்பின் 13ஆவது திருத்தம் மீறப்பட்டுள்ளது. 
 
தேச்சாதிகார அரசுக்குச் சவால் விடுக்கும் ஓர் அடிப்படை ஜனநாயகச் சவாலில்தான் எமது அரசியல் சித்தாந்தம் வேரூன்றி நிற்கின்றது. எனவே தமிழ் மக்களின் தேவைகளிலும் வேணவாக்களிலுமே எமது நீதிக்கும் சமத்துவத்திற்குமான அரசியல் நிகழ்ச்சித் திட்டம் வேரூன்றி இருக்கிறது. 
 
இவையயல்லாவற்றுக்கும் எம்மை நாமே ஆளும் அரசு எமக்கு வேண்டும். ஆட்சி அதிகாரத்தைப் பகிர்வதற்கான அரசியல் பேச்சுக்களை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம். 
 
த.தே.கூ. வின்  தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் இன்று வெளியிட்டு வைக்கப்படுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள  வடமாகாண சபைத் தேர்லுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்டு வைத்தார்.

குறித்த விஞ்ஞாபனத்தில் அதிகாரப் பகிர்வு ஏற்பாடு, இராணுவத் தாக்குதலும் அதன்  பின் விளைவுகளும், அரசியல் தீர்வு தொடர்பான எமது நிலைப்பாடு, தமிழ் மக்களின் உடனடி அக்கறைக்குரிய விடயங்கள், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள், முஸ்லீம் மக்கள், போரினால் வாழ்விழந்தவர்கள், யுத்தத்திற்கு பிந்திய காணிப்பிரச்சினை , சட்டமும் ஒழுங்கும், தொழில் உருவாக்கம், தேசிய மற்றும் சர்வதேச உதவியுடனான அபிவிருத்தி மற்றும் சர்வதேச சமூகத்தின் பங்கு என்ற அடிப்படையில் தமது எதிர்கால செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வடக்கின்  5 மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண சபை வேட்பாளர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.


 

ad

ad