புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2013

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க இந்தியா நிபந்தனை விதித்துள்ளது
கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சில நிபந்தனைகளை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்தால் மாநாட்டில் தான் கலந்து கொள்வதாக இராஜதந்திர மட்டத்தில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அரசியல்வாதிகள் உறுதிப்படுத்தியதாக லக்பிம தெரிவித்துள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல்,
அரசியல் அமைப்புச் சட்டத்தின் 4வது பிரிவில் உள்ள விடயங்களை நிறைவேற்றுதல்,
ஊடக சுதந்திரம், ஜனநாயகத்தை பாதுகாத்தல்,
நல்லாட்சியை பாதுகாத்தல்
ஆகிய நிபந்தனைகளை இந்தியா விதித்துள்ளது.
அத்துடன் உடனடி நடவடிக்கையாக வடக்கு உட்பட மூன்று மாகாணங்களின் தேர்தலை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்த வேண்டும் என்றும் இந்தியா, இலங்கைக்கு அறிவித்துள்ளது.
இந்தியாவின் இந்த நிபந்தனைகள் இராஜதந்திர மட்டத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இது சம்பந்தமாக உடனடியாக இராஜதந்திர ரீதியில் உறுதிமொழிகளை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகி இருப்பதாக அரசாங்கத்தின் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக லக்பிம கூறியுள்ளது.
இதனிடையே பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு தொடர்பாக கலந்துரையாட இந்திய பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை செல்லவுள்ளது.

ad

ad