புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2013

பிரபாகரன் மாவீரந்தான் மஹிந்தவுக்கும் தெரியும் – விக்னேஸ்வரன்

பிரபாகரன் மாவீரன்தான் மஹிந்தவுக்கும் தெரியும் வல்வெட்டித்துறையில் விக்னேஸ்வரன் உரை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரனே.
இதை நான் மட்டும் சொல்ல வில்லை. இந்த நாட்டின் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்­ஸ கூட பிரபாகரன் மாவீரன் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார் இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன்.

வல்வெட்டித்துறையில் நடை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது:
வல்வெட்டித்துறை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த மண். அந்த மண் ணில் நின்றுகொண்டு நான் சொல்கிறேன், பிரபாகரன் பயங்கரவாதி அல்ல. அவர் ஒரு மாவீரன். இதனை நான் மட்டும் கூறவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஸ கூட பிரபா கரன் ஒரு வீரன் என்பதனை ஏற்றுக்கொண்டுள்ளார். ஏனெனில் பிரபாகரன் இருந்த போது, 13+ என்றும் அதற்கும் மேலா கவும் தானாகவே சில அதிகா ரங்களை வழங்க ஜனா திபதி முன்வந்திருந்தார்.
ஆனால் பிர பாகரன் இல்லாதபோது 13 மைனஸ் என்றும், பின்னர் 13 என்ற திருத்தமே இல்லை என்றும் கூறத்தொடங்கி விட்டார். பிரபாகரனை மாவீரனாக ஏற்றுக் கொண்ட தால் தான் ஜனாதிபதி மஹிந்த தமிழர்களின் பிரச்சினைக்கு சில விட்டுக் கொடுப்புகளுக்கு முன்வந்திருந்தார். ஆனால் இப்போது அதற்கு அவர் தயாரில்லை. பிரபாகரன் பயங் கரவாதி அல்ல. அவர் தமிழ் இனத்தின் விடுதலைக்காக போரா டிய ஒரு வீரன்.
அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்று என்னை நேர் காணல் செய்தது.அப்போது பிரபாகரன் ஒரு பயங் கரவாதி தானே?” என்று கேட்டார்கள் அதற்கு நான் இல்லை இல்லை அவர் ஒரு மாவீரன்.ஒவ்வொருவரையும் நாங்கள் பார்க்கும் கோணமே அவர்கள் பற்றிய மதிப்பீட்டை ஏற்படுத்துகிறது. எனது கோணத்தில் அவர் பயங்கரவாதி அல்ல.
கண்டியில் வெள்ளையனை எதிர்த்துப் போராடிய யஹப்பிற்றிப்பொல திஸ்ஸவே என்பவரை ஆங்கிலேயர்கள் பயங்கரவாதி என்று பிரகடனம்செய்து அவரை தண்டித்தார்கள். ஆனால் இப்போது அவரை தேசிய வீரன் என்று பிரகடனப்படுத்தி சிலை வைத்து சிங்கள மக்கள் கொண்டாடுகிறார்கள்.
வெள்ளையரின் பார்வையில் பயங்கரவாதியாகத் தெரிந்த வீரயஹப்பிற்றிப்பொல திஸ்ஸ இப்போது சிங்கள மக்களின் பார்வையில் இலங்கையின் விடுதலைக்காகப் போராடிய தேசிய வீரனாகத் தெரிகின்றான்.
அதேபோலத்தான் பிரபாகரனும் எனக்கு விடுதலை வீரனாகத் தெரிகின்றான்.” என்று பதில் கூறியிருந்தேன். இந்த நேர்காணலில் நான் கூறிய விடயங்கள் பல சிங்கள ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரமாகின. இதனைப் பார்த்த அமைச்சர் டிலான் பெரேரா ” பதுளையில் மேல் நீதிமன்ற நீதிபதியாக விக்னேஸ்வரன் இருந்த போது அங்கே சட்டத்தரணியாகப் பணியாற்றி இருக்கிறேன். அப்போது அவர் வழங்கிய தீர்ப்புகளை தலை சாய்த்து ஏற்றுக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது அவர் பிரபாகரனை வீரன் என்று கூறுவதால், அவர் முன்னர் வழங்கிய தீர்ப்புகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்.” என்று கருத்து வெளியிட்டிருந்தார்.
அவருக்கு நான் ஒன்று கூறுகிறேன். என்னுடைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியம் எதுவுமில்லை. பிரபாகரன் மாவீரன் என்று முதலில் ஏற்றுக்கொண்டவர் உங்களின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ­ தான் எனவே நீங்கள் தான் (டிலான் பெரேரா போன்றோர்) உங்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

ad

ad