புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2013

யாழில் சட்டவிரோத ஆயதங்களின் பாவனை அதிகரிப்பு : கபே அமைப்பு குற்றச்சாட்டு

வன்செயலற்ற தேர்தல் ஒன்றை யாழ். மாவட்டத்தில் நடத்த எதிர்பார்ப்பதாயின் சட்டவிரோதமாகவும், அனுமதியுடனும் வைத்திருக்கின்ற ஆயுதங்கள் அனைத்தும் கையளிக்கப்படவேண்டும்
என கபே அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் விடுதி ஒன்றில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
சட்டவிரோத மற்றும் சொந்தப் பாவனையில் உள்ள ஆயுதங்கள் கையளிக்கப்பட்டு பொலிஸ் திணைக்களத்தின் மூலம் வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்த கபே அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் சாவகச்சேரி துப்பாக்கி சூட்டுச் சம்பவ வன்செயல் தொடர்பாக நீதி நிலைநாட்டப்படவில்லை என கபே அமைப்பு கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
சாவகச்சேரி சூட்டுச் சம்பவத்திற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் தாக்கப்பட்டு தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருப்பின் சாவகச்சேரி பிரச்சினை எழுந்திருக்க இடமில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
வேட்பாளர்கள் பாதுகாப்புப் பிரச்சினை இருப்பின் முறைப்பாடுகளை மேற்கொண்டு பொலிஸ் திணைக்களத்தின் மூலம் தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய நிலைமையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கபே அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

ad

ad