புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2013

தமிழர் பிரச்சினை தொடர்பில் அரசுடன் இணைந்து பணியாற்ற தயார்: சீ.வி.விக்னேஸ்வரன் - கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட அரசு தயார்: பசில்
தமிழர்களின் பிரச்சினை சம்பந்தமான விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவாகியுள்ள சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமோக வெற்றிக்கு பின் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய மாகாண சபை சில இடங்களில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வேண்டிய தேவையுள்ளது.
நாம் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கின்றோம். இது அரசாங்கத்துடன் நாங்கள் இணைந்து கொள்ளபோகிறோம் என்று அர்த்தமல்ல.
மாகாணங்களுக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உட்பட பல எதிர்கால பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடிய பின்னர் புதிய மாகாண சபை பதவியேற்கும்.
இதேவேளை, தென் பகுதி மக்கள் தமிழ் மக்களுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பில் தென் பகுதி அரசியல்வாதிகள் அந்த மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட அரசு தயார்: பசில்
வடக்கில் வெற்றியீட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயலாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முக்கிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
வடக்கு மாகாண மக்களினால் வழங்கப்பட்ட ஆணையை கூட்டமைப்பு கட்டிக் காக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார்.
குறிப்பாக மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கூட்டமைப்புடன் செயற்படத் தயார். மாகாணத்தின் இளைஞர் யுவதிகளின் அபிவிருத்தியை கூட்டமைப்பு உறுதி செய்ய வேண்டும்.
தேசிய நலன்களையும் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad