புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2013

இலங்கை மனித உரிமை விவகாரத்தில் கனடா தொடர்ந்து முரண்டு பிடிப்பு

நியூ­யோர்க்கில் ஐ.நா. பொதுச்­ச­பையின் 68 ஆவது அமர்­வுக்கு இணைந்த வகையில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற பொது­ந­ல­வாய உறுப்பு நாடு­களின் வெளி­வி­வ­கார அமைச்­சர்­களின் சந்­திப்பின் போது இலங்கை விவ­காரம் குறித்த தனது அபிப்­பி­ரா­யங்­களை கனடா ஆணித்­த­ர­மாக எடுத்­து­ரைத்­துள்­ளது.

இலங்­கையில் மனித உரிமை பேணப்­படும் விட­யத்தில் முன்­னேற்­ற­மெ­துவும் காணப்­ப­டாத சங்­க­ட­மான நிலை மற்றும் மாலை­தீவில் காணப்­பட்டு வரும் அர­சியல் ஸ்திரத்­தன்­மை­யற்ற நிலை ஆகிய விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யா­ட­வென அமைச்­சர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட சந்­தர்ப்­ப­மொன்­றா­கவே இச்­சந்­திப்பு அமைந்­துள்­ளது.
பொது­ந­ல­வாய  அமைப்பின் மூலா­தா­ர­மாக விளங்கும் விழு­மி­யங்கள் மற்றும் குறிக்­கோள்­களை மீறும் வகையில் இலங்கை செயற்­பட்டு வரு­வது குறித்து பொது­ந­ல­வாய அமைப்பு அதி­கூ­டிய ஈடு­பாடு காட்ட வேண்­டு­மென கனடா திரும்பத் திரும்ப அறை­கூவல் விடுத்த வண்­ண­மே­யுள்­ளது.

இது குறித்து கனே­டிய வெளி­வி­வ­கார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரி­விக்­கையில்,

இலங்­கையில் பார­தூ­ர­மான முறையில் இழைக்­கப்­பட்­டுள்ள போர்க்­குற்­றங்கள் தொடர்­பான குற்­றச்­சாட்­டு­க­ளுக்­கான பொறுப்­புக்­கூறும் கடப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தாமை குறித்த எமது விச­னங்கள், தமிழ் சமூ­கத்­தி­ன­ரு­ட­னான நல்­லி­ணக்க செயற்­பா­டின்மை, உள்­நாட்டு யுத்தம் முடி­வுற்ற காலம் தொட்டு இன்­று­வரை இடம்­பெற்­றுள்ள விரும்­பத்­த­காத நிகழ்­வுகள் உள்­ளிட்ட மனித உரி­மைகள் மீறப்­பட்டு வரும் விவ­காரம் குறித்து இன்று மீண்டும் நான் உரத்த தொனியில் தெட்டத் தெளி­வுற எடுத்­து­ரைத்தேன்.
பிர­தமர் ஸ்டீபன் ஹார்பர் தெளி­வான முறையில் தெரி­வித்­துள்­ள­வாறு இந்த விவ­காரம் குறித்த எமது விச­னங்­களை இலங்கை அர­சாங்கம் அலட்­சி­யப்­ப­டுத்­தாத வகையில் செயற்­பட வேண்­டு­மென்றே நாம் எதிர்­பார்க்­கின்றோம். இலங்­கையில் தற்­போ­தைய நிலை­வ­ரங்கள் மற்றும் இன்று வரை­யிலும் உண்­மை­யான முன்­னேற்­ற­மெ­துவும் காணப்­ப­டாமை ஆகி­யன நில­வாத நிலையில் பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநாட்டில் முழு­மை­யான அளவில் பங்­கேற்­ப­தென்­பது கனே­டிய அர­சுக்கு கடி­ன­மா­ன­தா­கவே இருக்கப் போகின்­றமை துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னதே எனக் குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

மாலை­தீவில் ஜனா­தி­பதி தேர்­தலை நடத்தி முடிப்­பதில் காணப்­பட்டு வரும் தாமதம் எமக்கு மித­மிஞ்­சிய கவ­லையை ஏற்­ப­டுத்தி வரு­வ­துடன் இந்த விவ­கா­ரத்தை உட­ன­டி­யாக கையா­ளப்­பட வேண்­டி­யதன் அவ­சியம் குறித்தும் நான் பொது­ந­ல­வாய அமைப்பில் உள்ள எனது சகாக்­க­ளுக்கு அஞ்சல் செய்­துள்ளேன்.

மாலை­தீவு மக்­களின் ஜன­நா­யக மத்­தி­யத்­துவம் சார்ந்த விருப்­புக்கள் செவி­சாய்க்­கப்­பட வேண்­டு­வ­துடன் இத்­த­கைய தேர்தல் குறித்த செயற்­கி­ர­மத்தை மேலும் தாம­தப்­ப­டுத்­தாத வகையில் மேற்­கொள்­ளு­மாறும் நாம் நீதித்­துறை அதி­கா­ரி­க­ளுக்கு அறை­கூவல் விடுக்­கின்றோம்’’ ’ எனவும் குறிப்பிட்டார்.

ad

ad