புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2013



           நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டுமென தேசிய கட்சிகளான காங்கிரஸும் பா.ஜ.க.வும் வலை வீசி வரும் நிலையில், கட்சியின் மாநில செயற்குழுவைக் கூட்டி விவாதித்தார் விஜயகாந்த். பரபரப்பாகவும் காரசார விவாதங்களுட னும் நடந்து முடிந்திருக்கிறது செயற்குழு
.நக்கீரன்

விஜயகாந்த் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், 180 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டிராமச்சந்திரன் வராததால் கூட்டம் துவங்குவது தாமதமானது. "ஏன், வரவில்லை? ஏன், வரவில்லை?' என்கிற கேள்விகள் உறுப்பினர்கள் மத்தியில் எழுந்து விடை தெரியாமல் தவித்தனர். கொஞ்ச நேரத்தில் விடை தெரிந்து உறுப்பினர்கள் அமைதியாக, 11.30க்கு மேடைக்கு வந்தார் விஜயகாந்த்.

""ஒரு விஷேசத்திற்காக வெளியூர் சென்ற அண்ணன் பண்ருட்டியார் வந்துகொண்டிருக்கிறார். அதான் தாமதம்'' என்று சொல்லிவிட்டு, கூட்டத்தை துவக்கினார் விஜயகாந்த். ஆனால், "செயற்குழுவின் தேதியை தன்னை கலந்தாலோசிக்காமல் முடிவு செய்யப்பட்டதால் கோபித்துக்கொண்டு செயற்குழு வையையே பண்ருட்டியார் புறக்கணித்துவிட்டார். அவரை விஜயகாந்த் சமாதானப்படுத்தி வர வழைத்துள்ளார்' என்று காட்டுத்தீ போல பரவியது செய்தி. இச்செய்தியறிந்து மாநில உளவுத்துறையும் பண்ருட்டியார் எங்கே இருக்கிறார் என தேடத் துவங்கிவிட்டது. 



இதன் உண்மை குறித்து தே.மு.தி.க. மேலிட தொடர்புகளிடம் அப்போதே நாம் பேசிய போது,’""செயற்குழுவை கூட்டுவது குறித்து முதலில் பண்ருட்டியாரிடம்தான் விவாதித்தார் கேப்டன். செப்டம்பர் 1-ந் தேதி வைத்துக் கொள்ளலாமா என்று கேப்டன் கேட்க, "முக்கிய திருமணம் ஒன்று அன்றைக்கு விருத்தாசலத்தில் இருக்கிறது' என்று பண்ருட்டியார் சொல்லவும், "அப்படின்னா…1-ந் தேதி மாலையில் கூட்டத்தை வைத்துக்கொள்ளலாம். இல்லைன்னா தேதியை மாத்திடலாம் அண்ணே' என்றார் கேப்டன். அதற்கு, "வேண்டாம்,…வேண்டாம்…1-ந் தேதி காலையிலேயே கூட்டம் இருக்கட்டும். நான், முதல்நாளே விருத்தாசலம் போய்ட்டு வந்திடறேன்' என்றார் பண்ருட்டியார். அதன்பிறகு செயற்குழுவில் நிறைவேற்ற வேண்டிய 14 தீர்மானங்களையும் வடிவமைத்து அதனை விஜயகாந்த்திடம் கொடுத்தார் பண்ருட்டியார்.

  எம்.ஜி.ஆர். காலத்து எம்.பி.யாக இருந்த ராமநாதன், பண்ருட்டியாரின் ஃபாலோயர். அவரது தம்பி மகளுக்கு செப்டம்பர் 1-ந் தேதி விருத்தாசலத்தில் திருமணம். இதில் கலந்து கொள்வதுதான் பண்ருட்டியார் புரோக்கிராம். திருமணத்துக்கு 2 நாள் முன்பு அந்த குடும்பத் தினரிடம் பேசிய பண்ருட்டியார், "1-ந்தேதி கட்சி செயற்குழு இருக்கிறது. அதனால முதல் நாளே விருத்தா சலத்துக்கு வந்துவிட்டு வந்துவிடு கிறேன்' என்று சொல்ல, திருமண குடும்பத் தினரோ, "இது சீர்திருத்த திருமணம். அதில் கலந்துகொண்டு நீங்கள் பேச வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. பிறகு உங்க முடிவு' என்று தெரிவிக்கவும் பண்ருட்டியாருக்கு தர்மசங்கடமாகி விட்டது. உடனே இதனை கேப்டனிடம் தெரிவித்த பண்ருட்டியார், "திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு 11.30 லிருந்து 12 மணிக்குள் வந்துவிடுகிறேன்' என்றார். "சரி' என்றார் கேப்டன். அப்படி, திருமணத்திற்கு சென்றவர் அங்கிருந்து கிளம்ப முடியாமல் தாமதமானது. அதனை கேப்டனிடம் தெரிவித்த பண்ருட்டியார், "தாமதம் செய்ய வேணாம். கூட்டத்தை நடத்திக்கொண்டிருங்கள். நான் வந்து ஜாயிண்ட் பண்ணிக்கிறேன்' என்று சொல்ல, "நீங்கள் இல்லாம எப்படி அண்ணே' என்று கேப்டன் கூற, "எவ்வளவு வேகமா நான் வந்தாலும் 1 மணிக்கு மேலே ஆயிடும். அதுவரை கூட்டம் நடக்காமல் இருப்பது நல்லதல்ல' என்றதும் தான், சரி என கூறிவிட்டு கூட்டத்தை துவக்கினார் கேப்டன். அப்பவும், "பண்ருட்டியார் வந்ததும் தான் தீர்மானம் நிறைவேத்தணும்'னு ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டார் கேப்டன். இதுதான் நடந்த உண்மை'' என்று பின்னணிகளைச் சுட்டிக் காட்டினார்கள்.

செயற்குழுவை துவக்கிய விஜயகாந்த், ""சுதந்திரமாக இங்கு பேசுங்கள். யாரும் யாரையும் ஒண்ணும் சொல்லமாட்டார்கள். நமக்குள்ளே நாம் விவாதித்துக்கொள்கிற கூட்டம் இது. அதனால் தயக்கம் இல்லாமல் மனதில் பட்டதை பேசுங்கள்'' என்று உறுப்பினர்களுக்கு தைரியத்தை கொடுத்தார். வைரஸ் காய்ச்சலால் இந்தக் கூட்டத்தில் பிரேமலதா கலந்துகொள்ள முடியவில்லை. செயற்குழு உறுப்பினர்கள் 9 பேர், மா.செ.க்கள் 7 பேர், மாநில அளவிலான அணி தலைவர்கள் 16 பேர், தலைமைக்கழக நிர்வாகி கள் 4 பேர் பேசினார்கள். ஆனால் எல்லோருக்கும் அதிகபட்சம் 5 நிமிடங்கள்தான் தரப்பட்டிருந்தது.

முதலில் பேசிய நெல்லை மாநகர தலைமை செயற்குழு உறுப்பினர் கலைவா ணன்,  ""நம்முடைய கூட்டணி இல்லைன்னா ஜெயிக்கமுடியாதுன்னு தெரிஞ்சதினாலதான் நம்முடைய கூட்டணியை தேடித்தேடி வந்தாங்க. நாமளும் கூட்டணி வெச்சிக்கிட்டோம். நம்ம தயவால் ஆட்சியில் உட்கார்ந்து விட்டு நம்மளையே அ.தி.மு.க. அழிக்கிறது. இவங்களாலயெல்லாம் நம்ம கட்சிய அழிச்சிட முடியாது. அதே சமயம், நம்மை அழிக்க துடிக்கிற அ.தி.மு.க.வை அழிக்க, வர்ற நாடாளுமன்ற தேர்தல்ல தி.மு.க. வோடு கூட்டணி வைக்கணும். தி.மு.க.வோட கூட்டணிதான் வெற்றி கூட்டணி'' என்றார் உரத்த குரலில்.

மயிலாடுதுறை பாலஅருட்செல்வன்,’’""ஒரு டி.வி நிகழ்ச்சியில தேர்தல் குறித்து ஒரு விவாதம் நடந்தது. அதில் பா.ஜ.க. இல.கணேசனும் காங்கிரஸ் சுதர்சன நாச்சியப்பனும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ரெண்டு பேருமே தமிழகத்தில் தவிர்க்கமுடியாத கட்சி தே.மு.தி.க.தான் என்று சொன்னார்கள். அந்த ரெண்டு கட்சிகளுமே நம்மோடு கூட்டணி வைக்கத் துடிக்கிறதுன்னு கேள்விப்படுறோம். எந்தக் கட்சியோட கூட்டணி வைத்தாலும் கேப்டன்தான் கிங் மேக்கராக இருக்க வேண் டும்''’என்றார் அழுத்தம் திருத்தமாக.

காஞ்சி மாவட்ட செயலாளர் அனகை முருகேசன், ""காங்கிரஸ் மீது சில குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அந்த கட்சியோடு கூட்டணி வைத்தால் அது நம்மையும் பாதிக்கலாம். நாம் தி.மு.க., பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்கலாம். யாருடன் கூட்டணி வைத்தாலும் நம்முடைய தனித்தன்மையை இழந்து விடக்கூடாது. நாடாளுமன்ற தேர் தலில் நம்முடைய எதிரிகளுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும்'' என்றார் உணர்ச்சிவயப்பட்டவராக.

திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயக்குமார், ""வருங்கால முதல்வர் வருங்கால முதல்வர் என்று கேப்டனையும் 2016-ல் நம்மு டைய ஆட்சிதான்னும் நாம எல்லாரும் குரல் கொடுக் கிறோம். ஆனா, 12 சதவீத வாக்குகள் வைத்திருக்கும் நாம் எப்படி ஆட்சியைப் பிடிக்க முடியும்? நம்முடைய வலிமையையும் வாக்கு வங்கியையும் அதிகரிக்கும் வகையில் மா.செ.க்கள் வேலை பார்ப்பதில்லை. இப்படி இருந்தால் 2016-ல் ஆட்சியை எப்படி பிடிக்க முடியும்?''என்று சொல்ல, மா.செ.க்கள் பலரும் "பேசாதே... பேசாதே...' என்று ஆவேசப்பட்டனர். அப்போது விஜயகாந்த் குறுக்கிட்டு, அமைதிப்படுத் தினார். அதனை தொடர்ந்து மேலும் பேசிய அவர், ""தி.மு.க., காங்கிரஸுடன் நாம் கூட்டணி வைத்தால் அதுதான் வெற்றிக் கூட்டணி'' என்றார் முடிவாக.

1.45.க்கு பண்ருட்டியார் வரவும் தீர்மானங்களை நிறைவேற்றினர். தொடர்ந்து விவாதம் நடந்தது. கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள் அனைவருமே, தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., என அவரவர்களின் சிந்தனைகளுக்கேற்ப கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். பெரும்பாலானோரின் கருத்து தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் கூட்டணி வரவேண்டுமென்பதாக எதிரொலித்திருக்கிறது. அதே சமயம் எல்லோருடைய கருத்தும், "இந்த தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை அ.தி.மு.க.வுக்கு நாம் கொடுத்தாக வேண்டும்' என்பதாகவே இருந்தது.

மாநில இளைஞரணி செயலாளர் சுதீஷ், ’""கேப்டனை எல்லோரும் கிங் மேக்கர் என்று சொன் னீர்கள். கிங் மேக்கர் என்றால் தலைவர்களை உரு வாக்குபவர் என்று அர்த்தம். தலைவரை உருவாக்குபவ ராக கேப்டன் இருக்கக்கூடாது. தலைவரே அவ ராகத்தான் எப்போதும் இருக்க வேண்டும். கிங் மேக்கர் என்பதை விட கிங் என்பதுதான் தலைவருக்கு பெருமை. அதை நாம் தேடி தரவேண்டும்'' என்றபோது கைத்தட்டல்களால் செயற்குழு அதிர்ந்தது.

பண்ருட்டியார் பேசியபோது, ""கூட்டணி வைத்துக்கொள்வது பெரிய விஷயமல்ல. நம்மை கூட்டணிக்குள் கொண்டு வரத்தான் எல்லா கட்சி களும் துடிக்கிறதே. அதனால் அது பெரிய விஷயமல்ல. யாருடன் கூட்டணி என்பதுதான் நம் முன்னால் நிற்கும் கேள்வி. இந்தியாவில் இன்றைக்கு எல்லா கட்சிகளுமே கூட்டணி வைத்துதான் ஜெயிக்க முடிகிறது. இந்த கட்சியோடு தான் கூட்டணி வைக்க வேண்டுமென்று ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லி யிருக்கிறீர்கள். அது உங்கள் பாயிண்ட். ஆனால், யாருடன் எப்போது எந்த மாதிரி கூட்டணி வைக்க வேண்டுமென்பது தலைவருக்கு தெரியும். அவர் எடுப்பது மிகச்சரியான முடிவாகவும் இருக்கும்.  கூட்டணி விஷயத்தில் அவருக்கு நாம் அட்வைஸ் பண்ணுவதை விட்டுவிட்டு நாம் இல்லாமல் எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது என்கிற அளவுக்கு கட்சி பணி செய்யுங்கள். நிச்சயம் மக்கள் விரும்புகிற, ஏற்றுக்கொள்கிற ஒரு முடிவைத்தான் தலைவர் எடுப்பார். எப்படி பார்த்தாலும் நாடாளுமன்ற தேர்தல் தே.மு.தி.க.வை சுற்றித்தான்'' என்றார்.

 இறுதியாக பேசிய விஜயகாந்த், ""கூட்டணி பத்தி முடிவெடுக்கும் அதிகாரத்தை எனக்கு நீங்கள் தந்ததற்கு நன்றி. கூட்டணி பத்தி நிறைய சொன்னீர்கள். சரி…கூட்டணி வைத்துதான் தேர் தலை சந்திக்க வேண்டுமென ஏன் யோசிக்கிறீர் கள்? கூட்டணி வைப்பதற்காகவா நாம் கட்சியை ஆரம்பிச்சோம்? கூட்டணி வைத்ததினாலா நமக்கு இவ்வளவு பலம் வந்தது? இல்லை. கூட்டணி வைக்காமல் இருந்ததினால்தான் மக்களிடம் நமக்கான வாக்கு வங்கி அதிகரித்தது. தமிழக அரசியலில் விஜயகாந்த் 21 வது இடத்தில் இருக் கிறார்னு சொன்னவங்க எல்லாம் நம்மைத் தேடி தேடி வந்தாங்களே….? அது எப்படி நடந்துச்சு? கூட்டணி வைக்காமல் இருந்ததினால்தான். கூட்டணி வேணும்கிற உங்க கருத்தை மறுக்கிறதா நினைச்சுக்காதீங்க. ஒரு செயற்குழு கூட்டம்னா எல்லோரும் ஃப்ரீயா பேசணும். அது மாதிரிதான் பேசுனீங்க. உங்க கருத்தை மனசுல வெச்சிக்கிறேன். அ.தி.மு.க.வோட கூட்டணி வெச்சிருந்தோம். அன்றைய சூழல்ல எல்லோரும் கூட்டணி வேணும்னு சொன்னீங்க. அதனால் வெச்சுக்கிட் டோம். ஆனா, என்ன நடந்துச்சு. உங்களுக்கே தெரியும். உங்க உணர்வுகள சொல்லியிருக்கீங்க. பார்த்துக்கலாம். இன்னும் நாட்கள் இருக்கு. ஜனவரி, பிப்ரவரியில் பிரமாண்டமா ஒரு மாநாடு நடத்தலாம்னு இருக்கேன். அந்த மாநாட்டுல முடிவு செய்வோம். அப்போதைய சூழல்களுக் கேற்ப மீண்டும் நாம் எல்லோரும் கலந்தாலோசிப் போம். மக்கள் என்ன சொல்றாங்கன்னு கேட்போம். அத வெச்சு முடிவெடுக்கலாம்''’ என்று விவரித்த விஜயகாந்த், தேர்தலை எதிர்கொள் வதற்கு வசதியாக 59 மாவட்ட செயலாளர்களும் தேர்தல் நிதி வசூலித்து தருமாறு கேட்டுக் கொண்டார்.

தே.மு.தி.க.வின் செயற்குழுவை அனைத்துக் கட்சிகளும் உற்றுக் கவனித்த நிலையில், கூட்டம் முடிந்ததும் தன்னை சந்தித்த மாநில நிர்வாகிகளிடம், ""எல்லோ ரையும் பேசவிட்டு ஜனநாயகமாக செயற்குழு நடந்து முடிந்ததில் ரொம்ப சந்தோஷம். தி.மு.க.வுட னான கூட்டணிக்கான குரல்தான் மெஜாரிட்டியாக ஒலிக்கிறது. ம்... பார்ப்போம்'' என்றிருக்கிறார் விஜயகாந்த்.

ad

ad