புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2013

கே.பி.யை அரசாங்கம் தனது தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியமை பாரதூரமான குற்றம்: ஐ.தே.க
இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் அழிக்கப்பட்டத்தில் நேரடியாக பொறுப்புக் கூறவேண்டிய கே.பி. என்ற குமரன் பத்மநாதனை மக்களின் பணத்தில் அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரகராக செயற்பட இடமளித்தமை பாரதூரமான குற்றம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
குமரன் பத்மநாதன் கிளிநொச்சியில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய தேர்தல் ஆணையாளர் தனது சிரிப்பின் மூலம் அரசாங்கத்தின் தேர்தல் மோசடிகளை மறைத்து வருகிறார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரிவின் தலைவராக இருந்த குமரன் பத்மநாதன் நேற்று அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரத்திற்கு ஆதரவு வழங்கும் செய்தியாளர் சந்திப்பொன்றை கிளிநொச்சியில் நடத்தினார்.
அது சம்பந்தமான செய்தி பாதுகாப்பு அமைச்சின் செய்திகளிலும் ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது. கிளிநொச்சி படைகளின் தலைமையகத்தில் அரச வளங்களை பயன்படுத்தி முற்றாக தேர்தல் சட்டங்களை மீறி இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதனால் தேர்தல் நடைபெற மூன்று நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் ஆணையாளர் உடனடியான தனது கவனத்தை செலுத்த வேண்டும்.
கே.பி. இந்த செய்தியாளர் சந்திப்பில் வடக்கில் போட்டியிடும் ஏனைய அரசியல் கட்சிகள் மீது குற்றம் சுமத்தி அரசாங்கத்திற்கு சாதகமான முறையில் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
நாட்டில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட நேரடியான காரணகர்த்தாவாக கே.பி. இருந்தாலும் அவருக்கு விரும்பியதை கூற உரிமை இருக்கின்றது என்று வாதிட முடியும்.
எனினும் மக்களிடம் இருந்து பெறும் வரி பணத்தில் இயங்கும் பாதுகாப்பு அமைச்சின் தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தின் பஸ்களை பயன்படுத்தி கே.பி.யின் ஊடக சந்திப்புக்கு கொழும்பில் இருந்து ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த ஊடக சந்திப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாதுகாப்பு தரப்பினரால் மட்டுமே செய்திருக்க முடியாது. இதனால் இந்த பாரதூரமான சம்பவம் குறித்து தேர்தல் ஆணையாளர் கவனம் செலுத்த வேண்டும் என அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ad

ad