புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2013


                லங்கையின் வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் சி.வி.விக்னேஸ்வரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ""எங்களது பிரச்சினைகளை தமிழக அரசியல்வாதிகள் டென்னிஸ் பந்துகளைப் போல பயன் படுத்திக்கொள்கிறார்கள். தமிழர் பிரச்சினைக்கு தனி நாடே தீர்வு என தமிழக அரசியல்வாதிகள் குறிப்பிடுவதால் சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகள் அச்சமடைந்திருக்கிறார்கள்.
 nakeran

தமிழக அரசியல்வாதிகளின் உணர்வுப்பூர்வமான கருத்துக்கள் இலங்கைத் தமிழர்களை  பாதிக் கும். கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான பிரச்சினையில் அயலவர் (தமிழகம்) நுழைய வேண்டிய அவசியமில்லை. அயலவர்கள் தலையீடு கணவன்- மனைவிக்குமிடையே விவாகரத் தை ஏற்படுத்தும்'' என்று தெரி வித்திருப்பது, ஈழ ஆதரவாளர் களிடமும் புலம் பெயர்ந்த தமி ழர்களிடமும் பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது குறித்து நாம் பேசியபோது,’’""தமிழீழத்தின் வடக்கு மாகாண தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை நிறுத்துவதாகத்தான் முடிவெடுத்திருந்தனர். இந்த முடிவை அறிந்திருந்த இந்தியா, இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதி காரிகளுக்கு சில உத்தரவு களை பிறப்பிக்கிறது. அதன்படி கூட்டமைப்பின ரை தூதரக அதிகாரிகள் அழைக்கிறார்கள். தூதரகத் திற்கு போய் வந்ததும், சேனாதிராஜாவுக்கு பதிலாக விக்னேஸ்வரன் அறிவிக்கப்படுகிறார்.



அதனால் விக்னேஸ் வரனின் தற்போதைய பேட்டி யின் பின்னணியில் இந்தியாவும் சிங்களமும் இருக்கிறது. தமிழ் நாட்டிற்கும் தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைப் போராட் டத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால் ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் தமிழகம் தலையிடக் கூடாது என்று சொல்ல விக்னேஸ்வரனுக்கு தகுதி கிடையாது. ஈழத்தமிழர்களின் வாழ்விற்கும் அரசியல் சம உரிமைக்கும் ஒரே தீர்வு தனித் தமிழீழம் மட்டுமே. இதனை தமிழகம் தீர்மானிக்கவில்லை. முதன்முதலில் இதனை தீர்மானித்தவர் ஈழ விடுதலைக்காக சாத்வீக முறையில் போராடிய தந்தை செல்வாதான். அதனையொட்டியே தேசியத் தலைவர் பிரபாகரனும் அறிவித்தார். அதனை தமிழகமும் ஏற்றுக்கொண்டு அந்த தீர்வுக்கு வலிமை சேர்க்கும் வகையில் அழுத்தம் கொடுத்து வருகிறது.

தமிழீழ தமிழர்கள் விக்னேஸ்வரனை தங்களின் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டு வெற்றிபெற வைக்கப்போகிறார்கள் என்கிற இறுமாப்பில் அவர் இருக்கிறார். ஆனால், "நாங்கள் ஒருபோதும் சிங்களத் தலைமையையோ அல்லது சிங்கள அரசியல் கட்சி களையோ ஏற்றுக் கொள்ளமாட்டோம்' என்பதை வெளிப்படுத்தவே, தமிழீழ மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்கின்றனரே தவிர அந்தக் கூட்டமைப்புதான் தங்களின் அரசியல் பிரதிநிதிகள் என்று உத்தரவாத சான்று அளிப்பதற்காக அல்ல. இதனை விக்னேஸ்வரனும் கூட்டமைப்பின் பதவி பித்தர்களும் புரிந்துகொண்டு இனி வாய் திறக்க வேண்டும்.

சிங்களத்துக்கும் ஈழத்தமிழினத்திற்கும் இருப்பது கணவன்-மனைவி சண்டை இல்லை. அது ஒரு இனப்படுகொலை யுத்தம். கணவன்- மனைவி சண்டையிலா ஒண்ணரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்தான் ராஜபக்சே? இல்லை... தமிழினத்தையே அழித்தொழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதி அது. எமது இனத்தையே சிங்களவன் அழித்தொழிக்கும் போது… தாய்த்தமிழகம் குரல் கொடுக்கிறது. இந்த வரலாற்றை கொச்சைப்படுத்த துணிந்துள்ள விக்னேஸ்வரன் ஒரு பொய்த்தமிழர்'' என்கிறார் கடுமையான கோபத்துடன்.


தமிழக வாழ்வுரிமை கட்சியின்  மாநில தலைவர் பண்ருட்டி வேல்முருகன்,’’""தேசியத் தலைவர் பிரபாகரனால் அடையாளம் காணப் பட்டதுதான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு. அதனால்தான் அந்த கூட்டமைப்பை ஈழத் தமிழர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். தனித்தமிழீ ழம் மட்டுமே தமக்கான தீர்வு என்பதில் உறுதியாக இருந்தவர் பிரபாகரன். அந்த திடமான தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கும் தமிழகத்தின் குரல்களை திசை திருப்பவே விக்னேஸ் வரனை இப்படி பேச வைத்திருக்கிறது சிங்களம். 

ஈழ விடுதலைக்காக கடந்த 30 வருடங்களாகவும் இப்பொழு தும் குரல் கொடுத்து வரும் தமிழக அரசியல்வாதிகளை விமர்சிக்கும் தகுதி விக் னேஸ்வரனுக்கு கிடையாது. அவர் கடந்த காலங் களில் பெண்களை வைத்து பாலியல் குற்றங்களை செய்து வந்த பிரேமானந்தாசாமியின் கால்களில் விழுந்து ஆசி பெற்று அவனது சிஷ்யனாக தன்னை வரித்துக்கொண்டவர். அப்படிப்பட்ட விக்னேஸ்வரன், முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப் பட்டிருப்பது தமிழர்களின் துரதிர்ஷ்டம் தான்''’என்கிறார் உக்கிரமாக.

ம.தி.மு.க.வின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினரான கணேசமூர்த்தி எம்.பி.யிடம் பேசியபோது, ""தமிழீழத்திற்கான அரசியல் தீர்வினை தமிழகத்தை தவிர்த்து முடிவெடுத்திட முடியாது. ஈழ விடுதலைக் கான போராட்டத்திற்கு தமிழக அரசியல் தலைவர் கள் கொடுத்த அழுத்தம்தான் பல்வேறு பரிமாணங் களை அடைய வைத்தது. இது, உலகம் அறிந்த வரலாறு. அப்படிப்பட்ட நிலையில், ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் தமிழகம் தலையிடக் கூடாது என்று சொல்பவர்கள் உண்மையான தமிழர்களாக இருக்க முடியாது. அப்படி சொல்கிற தகுதி எந்த ஒரு இலங்கை அரசியல்வாதிக்கும் கிடையாது. இந்த பட்டியலில் வருகிற விக்னேஸ்வரன் போன்றவர் களிடத்தில் ஈழத்தமிழினம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ரூபத்திலும் ஒரு சிங்களவன் வடக்கு பகுதியில் அதிகாரம் பெற்றுவிடக்கூடாது என்ப தாலேயே விக்னேஸ்வரனை தமிழர்கள் ஆதரிக்க வேண்டிய கட்டாயம். அந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் விக்னேஸ்வரன் போன்றவர்கள் திமிர்த்தனமாக உளறிக் கொட்டினால் ஈழத் தமிழினமும் தமிழகமும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது''’என்கிறார் மிக காட்டமாக.

இப்படி விக்னேஸ்வரனின் கருத்துக்கு கடுமையான கண்டனங்கள் புறப்பட்டிருப்பதால் அச்சமடைந்த அவர், ""தமிழகத்தைப் பற்றியும் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்தும் நான் தவறாக சொல்லவில்லை. என் கருத்தை திரித்து வெளியிட்டுவிட்டார்கள்'' என்று அவசரம் அவசரமாக விளக்கமளித்திருக்கிறார் விக்னேஸ்வரன்.

ad

ad