புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2013

கூட்டமைப்பின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.இலங்கையின் இறைமையை சீர்குலைக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புலிகளுக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை.
படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்கள் சர்வதேச தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் புலிகளின் நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்பட்டுள்ளதாக உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் குற்றம் சுமத்தியுள்ளதாக அப்பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad