புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2013

பொங்கு தமிழென சங்கே முழங்கு: மகிந்தவின் வருகைக்கு எதிராக அணிதிரளும் வட அமெரிக்கத் தமிழர்கள்
சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அமெரிக்க வருகைக்கு எதிராக அமெரிக்க மற்றும் கனேடியத் தமிழர்கள் அணிதிரளத் தயாராகி வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த மாநாட்டில் பங்கெடுப்பதற்காக சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 23ம் நாள் திங்கட்கிழமை நியூயோர்க் பயணமாகவுள்ளதாக தென்னிலங்கைச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் பொங்கு தமிழென சங்கே முழங்கு என்ற முழக்கத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் வட அமெரிக்கத் தமிழர்கள் அணிதிரளவுள்ளனர்.
நியூயோர்க் ஐ.நாவின் முன் “பொங்குதமிழ்” ஒன்றுகூடலாக தமிழர்கள் அணிதிரள இருப்பதோடு கனடாவில் மக்கள் பங்கெடுப்பதற்கான வாகன ஓழுங்குகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
இதேவேளை வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கு என வர்ணிக்கப்படும் கேணல் ரமேஸ் படுகொலையினை மையமாக கொண்டு, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான வழக்கொன்று மேன்முறையீடு செய்வதற்குரிய அமெரிக்க நீதிமன்றம் அனுமதியுடன் உயிர்ப்புடன் உள்ள நிலையில், சிறிலங்கா அரசுத் தலைவரின் அமெரிக்கப் பயணம் அமையவுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், சட்டவாளருமாகிய வி.உருத்திரகுமாரன் அவர்கள் மனுதாராரின் சார்பில் இந்த வழக்கினை நடாத்துகின்றார்.
ஐ.நா பொதுச்சபையின் வருடாந்த கூட்டத் தொடர் வரும் செப்டெம்பர் 24ம் நாள் தொடக்கம் ஒக்ரோபர் 4ம் நாள் வரை நடைபெறவுள்ள நிலையில் முதலாம் நாள் அமர்வில் மகிந்த ராஜபக்ச உரை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆறு நாட்கள் வரை அமெரிக்காவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுவதோடு, நியூயோர்க்கில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட உலக அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இதேவேளை சிறிலங்கா அரசுத் தலைவருடன் சிறிலங்காவின் அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் டளஸ் அழகபெரும ஆகியோரும் அமெரிக்கா செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad