புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2013

இரட்டைக் குடியுரிமையாளர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு விமானநிலைய புலனாய்வாளர்களிடம் அரசாங்கம் வேண்டுகோள்!முக்கியமாக சுவிஸ் , கனடா ,பிரிட்டிஷ் கடவுசீட்டை  பெற்றுள்ள தமிழர்கள் மீது சந்தேகம் 
வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்களை கண்காணிக்குமாறு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கடமை புரியும் புலனாய்வு (The State Intelligence Service (SIS) officers at the BIA)  அலுவலர்களுக்கு பாதுகாப்பு அமைச்சினூடாக ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையின வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்கள் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சுங்க அதிகாரிகளிடம் கையளிக்கும் தங்குமிட முகவரி கொழும்பு முகவரியாக வழங்கப்படுவதாகவும், எனினும் அவர்கள் வேறு முகவரியில் தங்கியிருப்பதாகவும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் விமான நிலையத்தில் தரையிறங்கும் வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் விமான நிலைய வருகைக்கான (immigration arrival card)  அட்டையில் பதியப்படும் விபரங்கள் சேகரிக்கப்பட்டு புலனாய்வுப்பிரிவின் ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் இரட்டைக் குடியுரிமையாளர்கள் விமான நிலையத்தில் கொடுக்கும் முகவரியிலா தங்கியிருக்கிறார்கள் என ஒப்பிட்டு பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் புலம்பெயர் தமிழர்கள் அதிகளவில் வாக்களிக்கலாம் என அரசாங்கம் எதிர்பார்ப்பதும், இரட்டைக் குடியுரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனரா? என கண்காணிப்பதற்குமே இந்த புதிய நடைமுறை என தெரிய வருகிறது.

ad

ad