புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2013

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியல் அமைப்பின் 157 (அ) உறுப்புரையையும் அரசியல் அமைப்பிற்கான ஆறாவது திருத்தத்தையும், மீறியுள்ளதாக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த 6 மனுக்களும் இன்று பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ், நீதியரசர்களான சந்திரா ஏகநாயக, ரோகினி மாரசிங்க ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

1. இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா ஆகியோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ம.கனகேஸ்வரன், உயர் நீதிமன்றில் தாக்கல் செயயப்பட்டுள்ள இந்த மனுக்கள் அனைத்தும் அரசியல் அமைப்பின்படி சட்டரீதியற்ற மனுக்களென பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்து தனது வாதத்தில், 

2. அரசியல் கட்சி அல்லது வேறு கழகம் அல்லது ஒழுங்கமைப்பு எதுவும் இலங்கையின் ஆள்புலத்துள்ளாகத் தனி அரசொன்றினை தாபித்தலைத் தனது இலக்குகளில் அல்லது குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டிருத்தலாகாது என அரசியல் அமைப்பின் 157 (அ) உறுப்புரையின் பிரிவு 2ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அங்கீகரிக்கப்பட்ட கட்சியல்ல. அது பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 8ம் பிரிவின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சில கட்சிகளின் கூட்டமைப்பாகும். எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் கட்சி என்ற அரசியல் அமைப்ப்பின் 157 (அ) உறுப்புரையின் பிரிவு 2ல் கூறப்பட்டுள்ள வியாக்கியானத்திற்கு உட்பட்மாட்டாது.

3. தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் அடங்கியுள்ள பல சட்டக் குறைபாடுகளை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், மேலும் இந்த மனுக்கள் சட்டத்தின் வரைவிலக்கனத்திற்கு உட்பட தாக்கல் செய்யப்படவில்லை என தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி சட்டத்தரணி ம.கனகேஸ்வரனினால் முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனைகளை எழுத்து மூலமாக சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டு ஒக்டோபர் மாதம் 23ம் திகதி மேலதிக விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. இம்மனுவின் பிரதிவாதிகள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ம.கனகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம் ஏ. சுமந்திரனும், நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அப்பாப்பிள்ளை விநாயகமுர்த்தி, சிரேஸ்ட சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவருமான கே.வி.தவராசா, வட மாகாண சபையில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சட்டத்தரணி சயந்தன் ஆகியோர் உயர் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.

ad

ad