புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 அக்., 2013


தேனிலவுக்காக உதகை வந்த இலங்கை இளைஞர் நீர்வீழ்ச்சி சுழலில் சிக்கி பலி
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் ரீகன் வயது-29, இவர், ஜெர்மனியில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஜான்சி எனபவருடன் கடந்த புதன்கிழமை சென்னையில் திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்காக புதுமணத் தம்பதியினர்,
உறவினர் நால்வருடன் நீலகிரிக்கு வந்துள்ளனர்.


சனிக்கிழமை இரவு முதுமலை புலிகள் காப்பகத்தில் தங்கிவிட்டு ஞாயிற்றுக்கிழமை உதகைக்கு மனைவி மற்றும் உறவினர்களுடன் வந்து கொண்டிருந்தனர். வழியில், கல்லட்டி நீர்வீழ்ச்சியில் குளிக்கச்  சென்றுள் ளனர்.
கடந்த ஒரு வாரமாக நீலகிரி மலைப்பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் பாறைகள் எல்லாம் பாசி படர்ந்து வழுக்குப் பாறைகளாக மாறியுள்ளன. இது தெரியாத ரீகன் அங்குள்ள ஒரு பாறை மீது நின்று குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கால் இடறி தண்ணீருக்குள் விழுந்துள்ளார்.
வேகமாக சென்று கொண்டிருந்த தண்ணீர் சுழலில் ரீகன் சிக்கியதாக தெரிகிறது, இதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கூச்சல் போட்டு சாலையில் சென்றவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்குவந்த தீயணைப்பு துறையினராலும் உடனடியாக ரீகனை கண்டுபிடிக்க முடியவில்லை. சுமார் 2 மணி நேர தேடுதலுக்குப் பின் ரீகனின் உடல் மீட்கப்பட்டது.
இத் தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் சங்கரும் கல்லட்டி நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்றார். உயிரிழந்தவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் அவரது உறவினர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்த பின், ரீகனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கோவைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார்.


இதுதொடர்பாக, புதுமந்து காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது திருமணமான நான்காம் நாளே மணமகன் சுழலில் சிக்கி இறந்தது பலருக்கும் வேதனையை ஏற்ப்படுத் தியது.

ad

ad