புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2013


           கேரளத்தில் இருந்து கிளம்பிய நரேந்திர மோடியின் தனி விமானம், பிற்பகல் 3.45-க்கு திருச்சியில் தரையிறங்கியது. விமானநிலையத்தில் வந்திறங்கியவருக்கு, திருச்சிவாழ் குஜராத்தி கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து, அம்பாசடர் காரில், கூடவே
பாம் ஜாமர் கார்கள் இரண்டுடன் எஸ்.ஆர்.எம். ஓட்டலில் வந்து இறங்கினார். அங்கு 30 நிமிடம் பா.ஜ.க. மற்றும் சங்க்பரிவார் அமைப்பினருடன் கலந்துரையாடல் நடந்தது. பா.ஜ.க. சார்பு தொழில் அதிபர்களுடனான சந்திப்பு, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. 

சரியாக 5 மணிக்கு மேடைக்கு வந்தார், மோடி. பா.ஜ.க. கூட்டம் என்றாலும், ஐ.ஜே.கே. தொண்டர்கள் கொடியும் தலைப்பாகையுடனும் வந்திருந்தனர். முதலில் பேசிய தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பெரியாரை யும் கலைஞரையும் தன் பேச்சில் இழுத்தார். அவரையடுத்துப் பேசிய இல. கணேசன், மோடியை சுருக்காகப் புகழ்ந்தார். 

"வணக்கம். வாழ்க தமிழ். வளர்க தமிழகம்' என்று தமிழில் பேச்சைத் தொடங்கிய ராஜ்நாத் சிங்கைப் போலவே, மோடியும் "பெரியோர்களே, தாய்மார்களே, வாலிப சிங்கங்களே' என்று தமிழ் பேசினார். 

மைக்கைப் பிடித்தவர், உடனேயே இரு கைகளையும் முன்னோக்கி உயர்த்தியபடி, பயங்கரவாதத்துக்கு பலியான ராணுவ வீரர்களுக்கு 2 நிமிடம் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். 60 நொடிகளில், ஓம் சாந்தி என அஞ்சலியை முடித்துவைத்தார். 

""கம்பர், திருவள்ளுவர் பிறந்த பூமி இது. ’தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணம் உண்டு. சங்க இலக்கியங் களின் மீது எனக்கு ஆர்வம் உண்டு. இந்தியாவிலேயே தமிழகம் முன்னேறிய மாநில மாக இருக்கிறது. இமெயில், மென்பொருள் நிறுவனங் கள், என பலவற்றிலும் முக்கியமான பொறுப்பில் தமிழன் இருக்கிறான்'' என்ற போது, விசில் பறந்தது. 

""குஜராத்தில் மணிநகர் தொகுதியில் இருக்கும் தமிழர்கள் எனக்கு அதிக வாக்களித்து என்னை வெற்றிபெற வைத்தனர்.  குஜராத் மீனவர்களை பாகிஸ் தான் எப்படி கடத்தி சிறைவைக்கிறதோ, அதைப்போலத்தான் தமிழக மீனவர்களை இலங்கையும் செய்கிறது'' என்றவர், திருச்சிக்குத் தாவினார். 

திருச்சியின் பெருமைகளை சொல்லி வந்தவர், "இங்கே வ.உ.சி. உப்பு சத்தியா கிரகம் நடத்தினார்' என்றார்.  



"மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க முடியாததற்கு பலவீன மான மத்திய அரசுதான் காரணம்' என்றதுடன், பொருளா தாரம், ரூபாய் மதிப்பு, வேலையின்மை, சிறுதொழில் முனைவோரின் கடன் என பிரச்சினைகளை வரிசைப் படுத்தினார். ஆதார் அட்டை விவகாரத்தைக் கையில் எடுத்தவர், "இதனால் யாருக்கு ஆதாயம்?' என்று ஒரு பிடிபிடித்தார். பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் திருப்பு முனையை உருவாக்கும் நோக்கத் துடன் இளந்தாமரைகள் மாநாட் டிற்கு வந்த மோடியின் பேச்சு, இளைஞர்களை மையப்படுத்தியதாக இருந்தது, பளிச்சென தெரிந்தது. 

ad

ad