புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2013

ஆந்திரா, ஒடிசாவில் 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன 
ஆந்திரா, ஒடிசாவில் 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் மேலும் இரண்டு நாட்கள் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.  


ஆந்திராவில் பிரகாசம், குண்டூர், ஹைத்ராபாத் உள்ளிட்ட 16 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 480க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பியதால் கரை உடைந்தன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் ஒரு லட்சம் பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் மற்றும் தெலுங்கானாவில் பலத்த மழை பெய்து வருகிறது. மழையால் 7 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான நெல், சோளம் உள்ளிட்ட பயிற்கள் அழுகிவிட்டதாக ஆந்திர மாநில விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 
இதனிடையே ஒடிசாவில் பெய்து வரும் மழைக்கு 5.5. லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றரை லட்சம் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒடிசாவில் பெய்துவரும் மழைக்கு இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திரா, ஒடிசாவில் கனமழை பெய்து வருவதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளன.

ad

ad