புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2013

30 வருடமாக சம்பாதித்த நற்பெயரெல்லாம் ஜெயலலிதா வழக்கு விசாரணையினால் பறி போனது: நீதிபதி பாலகிருஷ்ணா
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 


கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணா, கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். அதற்கு முன்னதாக, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, “வழக்கை விரைவாக முடிக்க நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும்” என உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 26- ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சௌஹான், நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அடங்கிய அமர்வு, “நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதற்கு சட்டத்தில் சாத்தியக்கூறுகள் உள்ளன. இது பற்றி கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் அம்மாநில அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும்” என தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் “நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது” என ஆதாரங்களுடன் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் குறிப்பிட்டு இருந்தார். 
இதைத் தொடர்ந்து நீதிபதி பாலகிருஷ்ணா, கடந்த 30 ஆண்டுகளாக, நீதிபதியாக இருந்து சம்பாதித்த நற்பெயரெல்லாம், ஜெயலலிதா வழக்கு விசாரணையினால் பறி போனது. என் நேர்மையை, சந்தேகிக்கும் அளவுக்கு, இவ்வழக்கு எனக்கு இடையூறாக அமைந்தது. 
எனது கண்ணியத்தின் மீதும் நேர்மையின் மீதும் திமுக சந்தேகம் எழுப்பி இருக்கிறது. திமுகவின் சந்தேகத்தை அதிகரிக்கும் வகையில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா எனக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். 
எனவே ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதியாக மீண்டும் பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை. எனவே, எனக்கு பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்திலோ அல்லது தொழிலாளர் பிரிவு நீதிமன்றத்திலோ பணியாற்ற வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என கோரியுள்ளதாக கர்நாடக உயர்நீதிமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சொத்துக் குவிப்பு வழக்கில் மீண்டும் நீதிபதியாக பணியாற்ற விரும்பவில்லை என முன்னாள் நீதிபதி எம்.எஸ். பாலகிருஷ்ணா, கர்நாடக உயர் நீதிமன்றப் பதிவாளரிடம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியு

ad

ad