புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2013

இலங்கைக்கு இந்திய பிரதமர் செல்லக்கூடாது! மன்னிப்பு சபையின் பிரசாரத்துக்கு இந்தியாவில் 35 ஆயிரம் பேர் ஆதரவு
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று கோரி சர்வதேச மன்னிப்பு சபை இந்தியாவி;ல் மேற்கொண்ட பிரசாரத்துக்கு இதுவரை 35 ஆயிரம் பொதுமக்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
இதனை சர்வதேச மன்னிப்பு சபை தமது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்த பிரசாரம் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் நவம்பர் மாதத்தில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு ஆரம்பமாகும் வரை நடத்தப்படவுள்ளது.
இலங்கையில் இருந்து இந்தியா விலகியிருப்பது மஹிந்த ராஜபக்சவின் மனித உரிமை மீறல்களுக்கு முடிவை கொண்டு வரும்.
இந்தியா பொதுநலவாய நாடுகளில் பங்கேற்றால் மன்மோகன் சிங் மஹிந்த ராஜபக்சவின் மனித உரிமை மீறல்களை ஏற்றுக் கொள்வதற்கு சமனாகும் என்று சர்வதேச மன்னிப்பு சபையில் இந்திய சிரேஸ்ட நிறைவேற்று அதிகாரி ஜி அனந்தபத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பு மஹிந்த ராஜபக்சவுக்கு செல்லுமானால் அது பொதுநலவாய நாடுகளின் விழுமியங்களுக்கு எதிரான செயலாகவே இருக்கும் என்று அனந்தபத்மநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad