புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2013


லாலு பிரசாத்துக்கு  5 ஆண்டு சிறை தண்டனை
 

பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்டீரிய ஜனதாதள கட்சின் தற்போதைய எம்.பியுமான  லல்லுபிரசாத் யாதவுக்கு மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.



பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்தபோது ரூ.950 கோடிக்கு கால்நடை தீவன ஊழல் நடந்தது. இததொடர்பாக சி.பி.ஐ. 53 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. லாலுபிரசாத் மீது மட்டும் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த 17 ஆண்டுகளாக இந்த மாட்டுத் தீவன ஊழல் வழக்கு விசாரணை நடந்தது. கடந்த 30–ந்தேதி ராஞ்சி சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு இந்த வழக்கில் தீர்ப்பு கூறியது. முன்னாள் முதல்வர்கள் லாலுபிரசாத் யாதவ், ஜெகந்நாத் மிஸ்ரா, ஜெகதீஸ் சர்மா எம்.பி. உள்பட 42 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து லாலுபிரசாத்தும் மற்றவர்களும் ராஞ்சி அருகில் உள்ள விர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகள் 42 பேருக்கும் எத்தனை ஆண்டு தண்டனை வழங்கப்படும் என்று தீர்ப்பு 3–ந்தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மதியம் 2.30 மணிக்கு பாதுகாப்பு காரணம் கருதி வீடியோ காண்பரன்சிங் மூலம் தீர்ப்பு வெளியிடப்பட்டது.
லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

ad

ad