புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2013

கரையை கடந்தது பைலின் புயல்: ஒடிசாவில் பலத்த பாதிப்பு: 9 லட்சம் பேர் வெளியேற்றம்: மீட்பு பணி தீவிரம்
    டிசா, ஆந்திரப்பிரதேசத்தை அச்சுறுத்தி வந்த பைலின் புயல் சனிக்கிழமை இரவு கரையை கடந்தது. கோபால்பூர் அருகே மணிக்கு 240 கி.மீ. சூறாவளியுடன் கரையை கடந்தது. புயலால்
ஒடிசா மாநிலம் முழுவதும் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கரையை கடந்த பைலின் புயல், ஒடிசாவின் உள்ளே நுழைந்த வலுவிழந்தது. புயல் கரையை கடந்தபோது 200 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது.

பைலின் புயலால் ஒடிசாவின் கஞ்சம், புரி மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. கஞ்சம், புரியில் கொட்டிய மழையால் நெற்பயிற்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகின. கஜபதி, குர்தா, கட்டாக், ஜகத்சிங் புதூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. பலத்த சூறாவளிக் காற்று வீசியதால், மின் கம்பங்களும், மரங்களும் முறிந்து விழுந்தன. ஒடிசாவில் உள்ள கடலோர மாவட்டங்களில் மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. 
புயலால் ஒடிசா மற்றும் ஆந்திராவில் 9 லட்சம் பேர் பாதுகாப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர். புயல் அதிகம் தாக்கிய ஒடிசாவில் 8 லட்சம் பேரும், ஆந்திராவில் ஒரு லட்சம் பேரும் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. 
புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒடிசா, ஆந்திரா கடலோர மாவட்டங்களில் பேரிடர் மேலாண்மை மீடபுக் குழுவினர் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன் துணை ராணுவத்தினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். புயலால் துண்டிக்கப்பட்ட மின் விநியோகத்தை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள

ad

ad